கோடிக்கணக்கில் விலைபோன வலிமை.. சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படக்குழு!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் வலிமை. அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர் கூட்டத்தில் இப்போது வரை இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் நடிகை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது

இன்னும் படத்தில் தல அஜித் கதாப்பாத்திர “பர்ஸ்ட் லுக்” கூட வெளியாகாத நிலையில் அப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.

படத்தின் ஆன்லைன் பிஸ்னஸ் முடிந்துவிட்டதாகவும் ஓடிடி திரையரங்கு மற்றும் டிவி சேனலுக்கான சேட்டிலைட் ரைட்ஸ் எல்லாவும் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டதாகவும் அதுவே பல கோடி ரூபாய்களுக்கு வியாபாரம் செய்து விட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ajith-valimai
ajith-valimai

அதனை தொடர்ந்து மற்ற தயாரிப்பாளர்கள் குழு “கப்சுப்”. பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் மன்னன் என்று பேசப்படும் தல படத்திற்கு தியேட்டரை தவிர்த்தே இவ்வளவு கலெக்சன் எனில் தியேட்டரில் படத்திற்கு இன்னும் எவ்வளவோ அள்ளலாம்.

- Advertisement -