உறுதி செய்யப்பட்ட வலிமை ரிலீஸ் தேதி.. தீபாவளிக்கு முன்னாடியே என்ட்ரி கொடுக்கும் தல

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக டீசர் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அதற்கு முன்னதாக இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளுக்காக விரைவில் படக்குழு ஸ்பெயின் செல்ல உள்ளது. அந்த காட்சிகளை மட்டும் பாக்கி வைத்துவிட்டு மீதி அனைத்து வேலைகளையும் முடித்து விட்டதாம் படக்குழு.

முன்னதாக வலிமை படம் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என பல தகவல்கள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் 2021 ஆம் ஆண்டு வெளியீடு என்பதை உறுதி செய்துள்ளது படக்குழு.

அதனைத் தொடர்ந்து தேதியும் குறித்து விட்டதாம். வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைவிடுமுறையை முன்னிட்டு வலிமை படம் திரைக்கு வர உள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

விடுமுறை நாட்கள் என்பதால் எந்தவித போட்டியும் இன்றி தனித்து களமிறங்க உள்ளது வலிமை திரைப்படம். இதனால் இதற்குமுன் விஜய் படங்கள் செய்த முதல் நாள் வசூல் சாதனையை வலிமை படம் கண்டிப்பாக முறியடித்து விடும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்கள்.

மேலும் விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஆனால் அதற்குள் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிப்பார்களா? என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது.

valimai-cinemapettai
valimai-cinemapettai
- Advertisement -