வலிமை பைக் ரேஸ் படம் அல்ல! ஆனா இந்த மாதிரி இருக்கும்.. சீக்ரெட்களை சொன்ன வினோத்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்டேட்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அடுத்தாண்டு பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள வலிமை படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். ஏதேனும் அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாகவே கேட்டு வந்தனர். ஆனால் படக்குழுவினர் எந்த அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருந்தாலும், படம் குறித்து ஏதேனும் அப்டேட்கள் வந்து ட்ரென்ட் ஆகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் முதல் முறையாக படத்தின் இயக்குனர் வினோத் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ‘நம்ம வீட்ல அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ போலிஸா இருந்தா எப்படி இயல்பா இருப்பாங்களோ அப்படி தான் அஜித் சார் கேரக்டர் வலிமை படத்துல இருக்கும்’ என கூறியுள்ளார்.

மேலும், ‘வலிமை படத்தில் எந்தவித ரொமான்ஸ் காட்சிகளும் இல்லை. அஜித்தும் நடிகை ஹூமா குரேஷியும் நண்பர்களாகவே நடித்துள்ளார்கள். இதுதவிர அஜித் இப்படத்தில் உண்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பதைவிட வாழ்ந்துள்ளார்’ என்று கூறலாம்.

ajith-valimai
ajith-valimai

அதேபோல் வலிமை படம் பைக் ரேஸ் படம் அல்ல. ஆனால் இப்படத்தில் 3 பெரிய பைக் சேஸிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் அது மட்டும் இல்லாமல் மக்கள் பிரச்சனையை சொல்லும் படமாக இருக்கும்’ என கூறியுள்ளார். வலிமை படம் குறித்து அப்டேட் வராதா என ஏங்கிய ரசிகர்களுக்கு இயக்குனரே அப்டேட் கூறியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்