முதல் நாளில் சாதனை படைக்க காத்திருக்கும் வலிமை.. இத்தனை கோடி வசூலா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அவரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் வலிமை படம் உருவாகியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக காலா பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக இயக்குனர் விக்னேஷ்சிவன் எழுதி, யுவன் சங்கர் ராஜா, அனுராக் குல்கர்னி இருவரும் பாடியிருந்த ‘நாங்க வேற மாறி’ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த பாடல் யூடியூப்பில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. அண்மையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடலாக ‘மதர் சாங்’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வருபவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அஜித் ரசிகர்களும் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் வலிமை படக்குழு முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்ய வேண்டும் என்பதற்காக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அன்று 8 காட்சிகள் வரை திரையிட முடியும்.

இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவித்து, முதல் நாள் வசூல் சாதனை படைக்கும். இதற்கான தீவிர பணியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதனால் வலிமை படம் தமிழகத்தில் முதல் நாளில் வசூல் மட்டும் 38 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்