மாஸ்டர் சாதனையை முறியடித்த வலிமை.. AK லேட்டா வந்தாலும் செம கெத்து

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே அஜித் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இரண்டாவது முறையாக இயக்குனர் வினோத்துடன் அஜித் இணைந்துள்ள வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

வலிமை படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில் வலிமை படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் வலிமை படம் கடந்து வந்த பாதை, படப்பிடிப்பு தளத்தில் கீழே விழுந்த உடனே எழுந்து ஷாட்டுக்கு ரெடியான அஜித் என அத்தனை காட்சிகளையும் படக்குழு பதிவு செய்துள்ளது.

மேக்கிங்கில் மிரட்டும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதுமட்டுமல்ல இந்த ஆண்டில் அதிக மக்களால் லைக் செய்யப்பட்ட மேக்கிங் வீடியோ என்ற பெருமையை வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ பெற்றுள்ளது. இதன் மூலம் மாஸ்டர் படத்தின் சாதனையை வலிமை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டு முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து 2.9 லட்சத்திற்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்ட மாஸ்டர் படத்தின் மேக்கிங் வீடியோ இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தாண்டில் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களின் பட்டியலில் அஜித் விஜய் படம் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

valimai
valimai
Sharing Is Caring:

அதிகம் படித்தவை