ஸ்பெயின் செல்வதில் தாமதம்.. வினோத் தம்பி, வாங்க அந்த வேலையை முடிச்சுடுவோம் என்ற அஜித்

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை. ஸ்பெயின் நாட்டில் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில் இன்னும் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தல அஜித் வலிமை படத்தில் தான் சம்பந்தப்பட்ட வேலைகளையெல்லாம் சத்தமில்லாமல் முடித்து விட்டாராம். வலிமை படத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளதால் வினோத்துக்கு அடுத்த பட வாய்ப்பையும் கொடுத்துள்ளாராம் அஜித்.

இது ஒருபுறம் இருக்க வலிமை படத்தின் வேலைகள் பல நாட்களாக இழுத்து வருவதால், என்னடா இது என தல அஜித் மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் அஜித் கேரியரில் அதிக நாட்கள் படமாக்கப்படும் திரைப்படமும் வலிமை தான்.

ஸ்பெயின் அனுமதி கிடைக்கும் வரை சும்மா இருக்க வேண்டாம் எனவே வினோத்தை அழைத்து தல அஜித் இதுவரை தான் நடித்துள்ள வலிமை படத்தின் காட்சிகள் அனைத்துக்கும் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டாராம்.

valimai-fanmade-posters
valimai-fanmade-posters

மேலும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே ஒன்றாம் தேதி தல அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அஜித்தின் பிறந்த நாளுக்குள் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என படக்குழுவினர் திட்டம் போட்டனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக வலிமை படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காமல் படக்குழுவினரை மிகவும் சோதித்துவிட்டது. இன்னும் வலிமை படத்தை மொத்தமாக முடிக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பதே தெரியாமல் ஸ்பெயின் அனுமதிக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

- Advertisement -