மூன்று முறையும் சொதப்பிய வலிமை ஹெச் வினோத்.. மாபெரும் கூட்டணிக்குத் தயார்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் படத்தை இயக்க தற்போது பல இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்தவகையில் இளம் இயக்குனரான வினோத் சதுரங்கவேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன்பிறகு கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார். இப்படங்களை தொடர்ந்து இயக்குனர் வினோத் மூன்றாவது படமே அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணியில் தற்போது வலிமை படம் தயாராகியுள்ளது. சமீபத்தில் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் பைக் ஸ்டண்டுகள் உள்ளிட்டவை போஸ்டர்களாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. வலிமை படத்தின் டீசர் மற்றும் பாடல்களும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இந்நிலையில் வினோத், அஜித், போனிகபூர் என இதே கூட்டணியில் அடுத்த படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் வினோத் பேட்டி ஒன்றில் விஜயை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இதில் விஜய் சாரை மூன்று முறை சந்தித்துள்ளேன். இரண்டு முறை கதை கூறி சொதப்பி உள்ளேன். இன்னும் ஒரு முறை வாய்ப்பு கேட்டுள்ளேன். அப்போது நன்றாக கதையை கூறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் சார் ஓகே சொன்னால் உடனே படத்தை இயக்க தயாராக உள்ளேன் என வினோத் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை