மிகவிரைவில் வரபோகும் வலிமை படம்.. இதுக்கு அவங்க மனசு வச்சா மட்டும் போதும்

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. மேலும் திரையரங்குகளிலும் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக கடந்த பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த பல பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாமல் அவர்களின் வெளியீட்டை தள்ளி வைத்தனர். இந்த சூழ்நிலையில் படம் வெளியானால் வசூல் அடியாகும் என்பதால் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று திடீரென தமிழகம் முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கை திரும்ப பெற்றது. இனி அனைத்து திரையரங்ககுகள் மற்றும் வணிக வளாகங்கள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யார் குஷியில் உள்ளார்களோ இல்லையோ அஜித் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

காரணம் பல ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் கடந்த பொங்கல் அன்று அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதால் அஜித் ரசிகர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

தற்போது ஊரடங்கை திரும்ப பெற்றுள்ளதால் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி உள்ளது. எனவே இந்த முறை நிச்சயம் வலிமை படம் வெளியாகும் என ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். எப்படியாவது இந்த முறை படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற முடிவில் உள்ளார்களாம்.

அவர்களின் ஆசை எப்போது நிறைவேறும் என்பது தான் தெரியவில்லை. லாக் டவுன் நேரத்தில் ரசிகர்கள் அலையாமல் இருந்தால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ரசிகர்கள் மனசு வச்சா கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கூட குறைந்து விடும். இதனையடுத்து வலிமை படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை