ஒருவழியாக அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் பற்றி வெளிவந்த அறிவிப்பு.. இப்பவாச்சும் சொன்னீங்களே!

தல அஜித்தின் திரைப்படங்கள் பெரும்பாலும் குறித்த நேரத்தில் வெளிவராது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதற்கு காரணமும் அஜித் தான். சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து அடிபட்டு விடுவார். இதனால் அவ்வப்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சில நாட்கள் கழித்து மீண்டும் தொடங்கப்படும்.

ஆனால் அஜித்தின் சினிமா கேரியரில் வலிமை படம் அளவுக்கு ஒரு படம் நீண்ட நாட்கள் படமாக்கப்படும் என்றால் சந்தேகம்தான். அந்த அளவுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

இருந்தும் வலிமை படத்தில் அஜித் நடிக்கிறார், வினோத் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்களை தவிர வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற செய்திகளை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தாலும் நாயகியாக அறிமுகமாகி என்பவரும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

தல அஜித்தின் பிறந்த நாளைக்கு ஃபர்ஸ்ட் லுக் வரும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனைத் தொடர்ந்து தீபாவளி பொங்கல் என பண்டிகை வந்தாலும் தல அஜித்தின் வலிமை படம் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. தல ரசிகர்களும் தொடர்ந்து அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்து ஒரு கட்டத்தில் சலித்து விட்டனர்.

இந்நிலையில் வலிமை பஸ்ட் பற்றிய அறிவிப்பு ஒன்று அதிகாரபூர்வமாக வரவில்லை என்றாலும் வலிமை வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ளது. அதனடிப்படையில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வலிமை படத்தின் ஷூட்டிங் மொத்தமும் முடிந்த பிறகுதான் வெளியிடப்படுமா. இன்னும் சில தினங்களில் வெளியே படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துவிடும் எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மேலும் தல அஜித்தின் வலிமை படம் அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆர்வம் காட்டி வருவதாகவும் அதற்கேற்றபடி விறுவிறுப்பாக வேலைகள் நடைபெற்று வருவதாகவும் வலிமை மட்டத்திலிருந்து செய்திகள் கசிந்துள்ளது.

valimai-ajith-cinemapettai
valimai-ajith-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்