ரசிகர்களுக்காக தல எடுத்த அதிரடி முடிவு.. இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். கிட்டத்தட்ட இரண்டு வருடகாலமாக அஜித் மற்றும் வினோத் இரண்டாவது முறையாக இணைந்து வலிமை படத்தை உருவாக்கி வருகின்றனர்.

சமீபத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் உடன் அடங்கிய மோஷன் போஸ்டர் ஆகியவை இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. ஆனால் கலவையான விமர்சனங்கள் வந்ததையும் மறக்கக் கூடாது.

இதனால் வலிமை படக்குழு அடுத்தடுத்த விஷயங்களில் உண்மை தன்மை அதிகம் இருக்கும்படி போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். டீசர் வெகு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது.

இது ஒரு புறமிருக்க தல அஜித் தன்னுடைய ரசிகர்களுக்காக ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளதாக அஜித் வட்டாரங்களிலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக வலிமை படத்தின் எந்த ஒரு விஷயமும் வெளிவராமல் தல ரசிகர்கள் சோகத்தில் இருந்தது அனைவரும் அறிந்ததே.

வலிமை படத்தை வருகின்ற ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு தியேட்டருக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில மாதங்களே இருப்பதால் இனி வார வாரம் வலிமை படம் பற்றிய அப்டேட்களை ரசிகர்களுக்கு கொடுத்து விடுங்கள் என உத்தரவிட்டுள்ளார் அஜித்.

அதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் வலிமை படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் புகைப்படம் வெளிவரும் எனவும் தெரிகிறது. இனி அவ்வப்போது வலிமை படத்தின் புகைப்படங்களை இணையத்தில் எதிர்பார்க்கலாம்.

valimai-cinemapettai-01
valimai-cinemapettai-01
- Advertisement -