வடிவுக்கரசி தேளாய் கொட்டிய 8 படங்கள்.. சிவாஜிக்கே தண்ணிகாட்டிய சூப்பர் ஹிட் படம்

நடிகை வடிவுக்கரசி கதாநாயகி, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி என அனைத்து கேரக்டர்களையும் தரமாக செய்து சினிமாவில் இன்று ஒரு மிகப்பெரிய முன்னணி முக்கியமான நடிகையாக உள்ளார். சினிமாவைப் பொருத்த மட்டிலும் கதாநாயகி, கவர்ச்சி நாயகி என இதற்கு பஞ்சமிருக்காது. காமெடி, குணச்சித்திர கேரக்டர்களுக்கு மட்டுமே அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படி எல்லாஎதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக நடிப்பவர் தான் வடிவுகரசி.

தமிழில் சிகப்பு ரோஜாக்கள், காஞ்சி காமாட்சி என்னும் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து வந்த வடிவுகரசி முதன்முதலாக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஷுக்கு நாயகியாக நடித்திருந்தார்.

பிறகு பல படங்களில் தனது திறமையான நடிப்பினை வெளிக்காட்டி பழம்பெரும் நடிகை காந்திமதிக்கு இணையாக வந்தார். வடிவுக்கரசியின் முக்கியமான 7 திரைப்படங்கள் இதோ

முதல் மரியாதை: இயக்குனர் பாரதிராஜா தயாரிப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் உருவான திரைப்படம் முதல் மரியாதை. இந்த படம் 1985-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தில் வடிவுகரசி சிவாஜிகணேசனின் மனைவிபொண்ணாத்தாளாக வந்து மிரட்டியே இருப்பார். இந்த படம் வரும் பொழுது வடிவுக்கரசி 30 வயது கூட ஆகியிருக்காது, ஆனால் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் திரையில் ஆட்சி செய்து இருப்பார்.

அருணாச்சலம்: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, மனோரமா என பல நட்சத்திரங்களை கொண்டு வெளியான திரைப்படம் தான் அருணாச்சலம். இதில் வடிவுக்கரசி கூன் விழுந்த கிழவியாக ரஜினிக்கு வில்லியாக மிரட்டி இருப்பார்.

பொறந்த வீடா புகுந்த வீடா: இயக்குனர் வி சேகர் இயக்கத்தில் சிவகுமார், பானுப்ரியா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடித்து 1993 ஆம் ஆண்டு வெளியான படம் பொறந்த வீடா புகுந்த வீடா . இதில் வடிவுக்கரசி அகந்தையான மாமியாராக நடித்திருப்பார்.

சத்யா: இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு கமல், அமலா நடித்து வெளியான சத்யா திரைப்படத்தில் கமலின் மாற்றாந்தாயாக நடித்திருப்பார்.

தவசி: விஜயகாந்த், சௌந்தர்யா நடித்த தவசி திரைப்படத்தில் வடிவுகரசி தன் மகனை இழந்து வாடும் பாவமான தாயாகவும் , மற்றொரு புறத்தில் தன் மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை பழி வாங்கும் குணம் உள்ள வில்லியாகவும் இரண்டு வேடங்களிலும் அசத்தி இருப்பார்.

வருஷம் பதினாறு: கார்த்திக் குஷ்பு நடித்த வருஷம் 16 திரைப்படத்தில் வடிவுக்கரசி குஷ்புவின் பாட்டியாக வந்திருப்பார். ஒரு பணக்கார திமிருடன் மேலும் குஷ்பு கார்த்திக்கின் காதலை பிரிக்கும் வில்லியாகவும் இந்த படத்தில் அவர் நடித்திருப்பார்

விருமன்: முத்தையா கார்த்தி கூட்டணியில் அதிதி சங்கர் நடித்த திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் வடிவுக்கரசி பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்திருப்பார். வில்லத்தனம் செய்யும் பிள்ளையை ஏற்றிவிடும் அம்மாவாக மிகச் சிறப்பாக இந்த படத்தில் அவர் நடித்திருந்தார்.

அம்மன்: இந்த படத்தில் கொடுமை செய்யும் மாமியாராக நடித்திருப்பார். சௌந்தர்யா சுரேஷ் ரமி ரெட்டி ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.  இப்போது பார்த்தால் கூட பயப்படும் அளவிற்கு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான் இன்னும் ஆச்சரியம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்