குடும்ப கதையா, அதிரடி ஆக்சனா ஒரே நாளில் போட்டு பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் நடிப்பில் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரவிருக்கும் தல – தளபதி நடிப்பில் வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் இவர்களில் யார் அதிகளவு ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ள போகிறார்கள் என்பதை காணலாம்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே நாளில் விஜய் மற்றும் அஜீத்தின் வாரிசு, துணிவு படங்கள் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இரண்டு படங்களின் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்பொழுது விஜயின் வாரிசு படத்தின் டிரைலரானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Also Read: துணிவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறும் வாரிசு.. நாளை ட்ரெய்லரில் இருக்கும் உள்குத்து

விஜய் முதல் முறையாக குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தை கொண்ட படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் குடும்பப் பாங்கான கதை அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய வாரிசு படத்திலும் இவ்வாறான குடும்ப கதை அம்சம் கொண்ட சென்டிமென்டை உட்பகுத்தியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

தல அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் போனிக் கபூர் தயாரிப்பில் துணிவு உருவாகி வருகிறது. படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர் பாவனி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித் குமார் நடிப்பில் மாசாக வரவிருக்கும் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Also Read: மேடையில உளரும் போதே தெரிஞ்சது, வாரிசு முழுக்க முழுக்க அந்த மாதரி படம்.. குண்டத்தூக்கி போட்ட விஜய்யின் ப்ரோ!

அதிலும் வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு ஏற்றார் போல் வெள்ளை முடி தாடியுடன் மாசாக துப்பாக்கியை கையில் ஏந்தியபடி பரபரப்புக்கும், ஆக்ஷனுக்கும் பஞ்சமே இல்லாமல் திரில்லர் நிறைந்த படமாக இருப்பது போன்று ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. தல அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படமானது ஒரு கேங்ஸ்டர் மூவியாக உருவாகியுள்ளது. வங்கிகளில் பொது மக்களிடம் இருந்து மறைமுகமாக அடிக்கும் கொள்ளையை மையமாகக் கொண்டு இக்கதையானது அமைந்துள்ளது.

தல தளபதி நடிப்பில் வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு படத்தின் கதைக்களமானது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. அதிலும் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு படம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் இவர்களுக்கு என்று தனித்தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் இவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களில் நல்ல கதைய அம்சம் கொண்ட திரைப்படம் தான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப கதையை விட அதிரடி ஆக்சனுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Also Read: வாரிசு விழாவை புறக்கணித்த சங்கீதா, கிளம்பிய விவாகரத்து சர்ச்சை.. வெளிவந்த உண்மை காரணம்

Stay Connected

1,170,265FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -