வாடிவாசல் எப்போது? சூர்யா ரசிகர்களுக்கு வெற்றிமாறன் சார்பாக வந்த பதில்

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு நீண்ட நாள் வெற்றி தாகத்தை தீர்த்துக் கொண்ட சூர்யா தற்போது அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அடுத்தடுத்த படங்களில் இயக்குனர்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம்தான் சூர்யா 40.

இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். டி இமான் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்களின் நீண்டகால ஏக்கமாக இருந்து கொண்டிருக்கும் திரைப்படம்தான் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக உள்ள வாடிவாசல் படம்.

சூர்யா முதன் முறையாக வெற்றிமாறனுடன் இனைந்து உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இரட்டிப்பான நிலையில் தற்போதுவரை படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் ரசிகர்கள் பரிதவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன் ஒரு பக்கம் சூரி படம் இயக்கிக் கொண்டிருக்கிறார், அதேபோல் சூர்யாவும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் எப்போது வாடிவாசல் படம் வரும் என ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் படம் சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் அதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது. இன்னும் மூன்று மாத காலத்திற்குள் சூர்யா தன்னுடைய படத்தையும், வெற்றிமாறன் தன்னுடைய படத்தையும் முடித்து விடுவார்களாம். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் படம் வாடிவாசல் தானாம்.

vaadivaasal-cinemapettai-01
vaadivaasal-cinemapettai-01

படத்தில் கூட்டமாக அதிக காட்சிகள் எடுக்க வேண்டியிருப்பதால் பாதுகாப்பு கருதி படத்தை தள்ளிப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கண்டிப்பாக வாடி வாசல் திரைப்படம் 2022 சம்மரில் ரிலீஸ் என்பது மட்டும் உறுதியாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்