ஹாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்ட வாடிவாசல் போஸ்டர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்

சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்திற்குத்தான் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களை விட ஒரு மடங்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்குக் காரணமும் வெற்றிமாறன் தான்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ள மற்ற இயக்குனர்களை தாண்டி வெற்றி மாறன் படங்களுக்கு என்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. அது நடிகர்களுக்காக இல்லாமல் இயக்குனருக்காக சேர்ந்த கூட்டம்.

கூட்டம் கூட்டமாக ஒரு இயக்குனரின் பெயருக்காக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதெல்லாம் அரிது. ஆனால் வெற்றிமாறனுக்கு அவருடைய படங்களின் மூலம் தானாகவே அமைந்து விட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை என்ற படம் வெளியாக உள்ளது.

அதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வந்தன. இந்நிலையில் நீண்ட நாட்களாக வாடிவாசல் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தன.

ஆனால் நேற்று சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்டனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் உடனடியாக இணையதளத்தில் வேறு ஏதேனும் போஸ்டர் இது போல இருக்கிறதா? என தேடியுள்ளனர்.

அப்போது ஹாலிவுட்டில் உருவான, ஹவுஸ் ஆப் தி டிராகன் என்ற படத்தின் போஸ்டரில் காப்பியாக வாடிவாசல் படத்தின் போஸ்டர் அமைந்துள்ளது என இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஆனால் சூர்யா ரசிகர்கள், அது வேற, இது வேற என அவர்களுடன் மல்லுக்கட்டி வருகின்றனர்.

vaadivaasal-poster-copy
vaadivaasal-poster-copy
- Advertisement -