ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

லீக்கானது வாடிவாசல் படத்தின் முழு கதை.. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் வெற்றிமாறன்

பாலாவின் வணங்கான் படம் ட்ராப் ஆன பிறகு  சிறுத்த சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தப் படத்திற்கு முன்பே வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்திற்கான முன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததால் சூர்யா தற்போது சிறுத்தை சிவா படத்தில் வேக வேகமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதன் பிறகு அடுத்ததாக வாடிவாசல் படத்தில் தான் சூர்யா நடிக்க திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் படத்திற்கான முழு கதையும் லீக்கானதால், இனி என்ன செய்வதென்று தெரியாமல் வெற்றிமாறன் விழி பிதுங்கி நிற்கிறார்.

Also Read: ஓஹோ இதுதான் உண்மையான சங்கதியா.. சீறிப்பாய்ந்த காளையால் நின்னு போன வாடிவாசல் ஷூட்டிங்

 பிரசாத் ஸ்டுடியோவில் நடந்த மீட்டிங்  ஒன்றில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் வாடிவாசல் படம் பற்றி எல்லா அப்டேட்டையும் கொடுத்துள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஈசிஆர்-இல் இந்த படத்தின் முதல் கட்ட டெஸ்ட் ஷூட்டிங் நடைபெற்றது.

அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்களை வெளியிட படக்குழுவினர் திட்டம் தீட்டியிருந்தனர். அங்கே படத்திற்கு தேவைப்படும் அனைத்து காளை மாடுகளும் வரவழைக்கப்பட்டன. படத்தின் கதைப்படி ஒரு முரட்டுக்காளை அதை யார் அடக்குவது என்பதுதான் கதை. 

Also Read: தேசிய விருது வாங்கியதில் இருந்தே நேரம் சரியில்லை.. சூர்யாவின் வாழ்க்கையில் விளையாடும் விதி

அந்த காளை மாட்டுடன் சூர்யா நெருங்க கூட முடியவில்லையாம். அந்த மாட்டின் உரிமையாளர், இது எங்கள் குடும்ப உறுப்பினரே நெருங்க விடாது. அதனால் நீங்கள் குறைந்தது மூன்று மாதங்கள் இந்த காலை மாட்டுடன் ஒன்றாக இருந்து பழக வேண்டுமென்று கூறியுள்ளார்.

வாடிவாசல் படம் சி.சு. செல்லப்பாவின் நாவல். படத்தின் அனைத்தும் தத்ரூபமாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட சூழலில் சூர்யாவிற்கும் படத்தில் நடிக்கும் காளை மாட்டிற்கும் நல்ல நட்பு ஏற்பட காலதாமதம் ஆகிறது. மறுபுறம் படத்தின் கதை லீக் ஆனதை வைத்து என்ன செய்வதென்று தெரியாமல் வெற்றிமாறன் முழித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

- Advertisement -

Trending News