படமே ஆரம்பிக்கல.. அதற்குள் வியாபாரத்தில் பிச்சு உதறும் வாடிவாசல்

தமிழ் சினிமாவில் அடுத்ததாக பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவர இருந்தாலும் சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு மொத்த தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் மிகையாகாது.

வெற்றிமாறன் படங்களை அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்திருப்பார்கள். அந்த வகையில் அடுத்ததாக சூர்யாவை வைத்து கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வாடிவாசல் எனும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தின் டைட்டிலுக்கு போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. அதற்கு முன்னதாக சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்து கொடுத்துவிட்டு வருவதாக கூறியுள்ளாராம்.

வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானதுமே வாடிவாசல் படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளது தமிழ் சினிமாவை பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு படம் தொடங்கப்படாத நிலையில் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் விற்கப்பட்டது இதுவே முதல்முறை என்கிறது சினிமா வட்டாரம்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் பிரபல நிறுவனத்துடன் சேர்ந்து சூர்யா தயாரிக்க உள்ளார். இதிலிருந்து சூர்யா தன்னுடைய மார்க்கெட்டை பாலிவுட்டில் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது என்கிறார்கள் சினிமா வாசிகள்.

வாடிவாசல் படம் தமிழர்களின் கலாச்சாரத்தை பற்றி பேசப்போவதால் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் இந்தப்படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என கலைப்புலி எஸ் தாணு ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

vaadivaasal-cinemapettai
vaadivaasal-cinemapettai
- Advertisement -