இந்தியன் 2 படத்திற்கு வந்த பெரும் சிக்கல்.. கை கொடுத்து காப்பாற்றிய உதயநிதி ஸ்டாலின்

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் சில பிரச்சனைகளின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த ஆண்டு எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது.

அதனால் படப்பிடிப்பு கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஷங்கருக்கும் படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்காமல் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கமலும் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது தான் இந்த திரைப்படத்திற்கு இருந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துள்ளது. ஒரு வழியாக இந்தியன் 2 திரைப்படத்தை ஆரம்பிக்கலாம் என்ற முடிவுக்கு பட குழு வந்துள்ளது.

ஆனால் இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்த அளவைவிட கைமீறி போனதால் லைகா நிறுவனத்தால் இந்த படத்தை தொடர்ந்து தயாரிக்க முடியவில்லை. அதனால் தற்போது இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில உரிமைகளும் உதயநிதியின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது லைகா நிறுவனம் இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து முற்றிலுமாக விலக இருப்பதாகவும், உதயநிதி ஸ்டாலின் தான் இந்தியன் 2 திரைப்படத்தை முழுக்க முழுக்க தயாரிக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது இந்தியன் 2 திரைப்படம் சில பிரச்சனைகளில் இருந்தபோது அதற்கு உதயநிதி தான் சில பல உதவிகளை செய்தார். அதன்மூலம் அவரே இணை தயாரிப்பாளராகவும் மாற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரே மொத்த படத்தையும் தயாரிக்க இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கு வந்த பெரும் சிக்கலை தீர்த்து அவரே தயாரிக்க இருப்பது படத்திற்கான பக்க பலமாக மாறி உள்ளது.

Next Story

- Advertisement -