தளபதி 65 படத்தில் விஜய்யின் அனல் பறக்கும் கதாபாத்திரம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் முடிசூடா மன்னனாக திகழ்பவர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் பூஜித்து வருகின்றனர். அதேபோல் தளபதி விஜய்யும் தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதே இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய் பிரியர்களுக்கு பெரும் தீனியாக அமைந்தது என்றே கூறலாம். அதுமட்டுமில்லாமல் பல மாதங்களாக தொலைந்து போயிருந்த தியேட்டர்களுக்கு மாஸ்டர் திரைப்படம் தான் புத்துயிர் அளித்தது. இந்தப் படம் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் பல திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு தான் வருகிறது.

அதேபோல் தளபதி அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், புதியதாக படமொன்றில் நடிக்க உள்ளார் என்பதும், இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் ‘தளபதி 65’ படத்தை பற்றிய பல செய்திகள் இணையத்தில் வெளியாகி, தளபதி ரசிகர்களை குஷி ஆக்கியுள்ளது.

அதாவது தளபதி 65 படம் மாஸ்டர் படத்தைப் போலவே வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீசாக உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் தளபதி இன்டர்நேஷனல் ஸ்பை ஏஜென்ட் ரோலில் நடிக்க உள்ளாராம். இத வைத்து பார்க்கும் பொது கிட்டத்தட்ட துப்பாக்கி படத்தின் கதை போல் தெரிகிறதே என்று மற்ற ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

thalapathy65-cinemapettai
thalapathy65-cinemapettai

மேலும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் வருகின்ற மே மாதம் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான ‘தளபதி 65’ படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இந்த அப்டேட்கள் தளபதி வெறியர்களை மேலும் வெறியூட்டி உள்ளது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -