அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான்.. பிபி ஜோடிகள் மேடையில் கமல் கொடுத்த அப்டேட்

உலக நாயகன் கமலஹாசனின் படங்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்தது. அதை எல்லாம் ஒட்டுமொத்தமாக விக்ரம் படத்தில் ஈடு செய்துள்ளார் கமல். இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியுடன் கமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு நாடுகளுக்கு கமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கமல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் ஜோடி சேர்ந்த ஆடும் ஒரு நடன நிகழ்ச்சி தான் பிபி ஜோடிகள். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தது பலரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆன ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ராஜூ கமலின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை கேட்டிருந்தார். முதலில் சொல்ல மறுத்த கமல் பிரியங்கா வற்புறுத்தியதால் தனது அடுத்த படத்தை பற்றி கூறியுள்ளார். அதாவது பகத் பாசில் நடிப்பில் வெளியான மாலிக் படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.

மேலும் இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது. மகேஷ் நாராயணன் கமல் இயக்கி, நடித்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 போன்ற பல படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார். இதுதவிர சில படங்களில் ஒளிப்பதிவாளராகவும் வேலை பார்த்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கமலின் அடுத்த படத்திற்கான அப்டேட் அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. மேலும் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்