நம்பி வந்த பிரபலங்களை வீணடித்த இயக்குனர் வம்சி.. வாரிசு படத்தில் தேவையில்லாத 6 பிரபலங்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் அதிகமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இதில் தேவையில்லாத பிரபலங்களை கதையில் கொண்டு வந்து அவர்களுக்கு அதிகமான அளவில் காட்சிகள் இல்லாதபடி இருந்தது ரசிகர்களுக்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதில் குறிப்பாக விடிவி கணேஷ் மற்றும் ஸ்ரீமன் இவர்கள் வந்த காட்சியில் ஒரு விதமான காமெடி கலந்த கலவையாக இருந்தாலும் இப்படத்தில் இவர்களுக்கு பெரிதாக பேசும் அளவிற்கு ஒன்றுமில்லாமல் போய்விட்டது. இதற்கு இவர்கள் இதில் நடிக்காமலே இருந்திருக்கலாம் என்று பேசும் அளவிற்கு தான் இருந்தது. சாதாரணமாகவே இந்த காட்சியில் வேற யாரையும் நடிக்க வைத்திருந்தால் கூட இந்த காட்சிகள் நன்றாக அமைந்திருக்கும்.

Also read: மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? வம்சியை வம்பிழுத்த ப்ளூ சட்டைமாறன்

அதிலும் இந்தப் படத்தில் காமெடி நடிகர் சதீஷின் கதாபாத்திரம் ஒரு சில வினாடிக்கு மட்டும் இருப்பது வேஸ்ட் தான். இதற்கு இவர் வராமலே இருந்திருக்கலாம். ஆனாலும் விஜய் படத்தில் நடிப்பதற்காக மட்டும் வந்தது போல் தெரிகிறது. ஒரு சில பேருக்கு சதீஷ் வந்தாரா என்ற சந்தேகமே இந்த படத்தை பார்த்த பிறகும் இருக்கிறது. அந்த அளவுக்கு தான் இவருக்கு காட்சிகள் இருந்தது.

சுமன் இதில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர் 120 க்கு மேல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர். இவருக்கு இந்த நிலைமை என்றால் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களுக்கு பரவாயில்லை என்று தோன்றும் அளவிற்கு இருக்கிறது.

Also read: மகேஷ்பாபுவை அட்ட காப்பியடித்த விஜய்.. வம்சியை இங்க மட்டும் இல்ல அங்கயும் வச்சு செய்றாங்களாம்

இதில் எஸ்.ஜே சூர்யா என்ட்ரி ஆன பிறகு ரசிகர்களிடையே பெரிய கைத்தட்டல்கள்,விசில்கள் என்று ஆரவாரத்துடன் ரசித்து வந்தனர். ஆனாலும் இவருக்கு இருக்க ரசிகர் பலமும் முந்தைய படங்களில் இவர் கொடுத்த கதாபாத்திரமாகவும் சரி இவருக்கு முக்கியமான ஒரு அந்தஸ்தை கொடுக்கும் வகையில் தான் அமைந்தது. அந்த வகையில் இப்படத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு அமையவில்லை.

மேலும் இதில் விஜய்க்கு அண்ணியாக வரும் பிக் பாஸ் சமியுத்தா இவருக்கு சும்மா வாயை மட்டும் மூடிக்கிட்டு வர மாதிரி தான் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. இயக்குனர் வம்சியை நம்பி வந்த இந்த பிரபலங்கள் அனைவரும் தேவையில்லாத அளவுக்கு தான் இருந்து வந்தார்கள். இதில் பிரபலங்களின் கூட்டத்தை சேர்க்க வேண்டும் என்ற வகையில் மட்டும் தான் இவர்களை தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது.

Also read: விஜய்காக மட்டுமே வாரிசு படத்தில் நடித்தேன்.. மற்றபடி என்னுடைய கதாபாத்திரம் வேஸ்ட் தான்

- Advertisement -