புத்தியை கத்தி மாதிரி பயன்படுத்திய திரிஷா.. மக்கு போல் மாட்டிக் கொண்டு முழிக்கும் பழைய லேடி சூப்பர் ஸ்டார்

திரிஷாவிற்கு 40 வயதாகியும் இளமை மாறாத பருவ கன்னியாக இன்னும் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுவும் சாதாரண நடிகையாக இல்லாமல் அனைத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து முன்னணி ஹீரோகளுக்கு இன்னமும் ஜோடி போட்டு இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார். அதிலும் ஒரு ரவுண்டு ஏற்கனவே கலக்கி வந்த பிறகு இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றி பெற்று வருகிறார்.

அதாவது சமீபத்தில் த்ரிஷா எங்கே போனார் என்று தேடும் அளவிற்கு இவருடைய பட வாய்ப்புகள் இருந்தது. ஆனால் எப்போ பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தாரோ அப்போதிலிருந்தே இவர் பக்கம் ரசிகர்கள் கவனம் அதிகமாக திரும்பிவிட்டது. அத்துடன் இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இவருடைய சினிமா பாதை வேறு விதமாக படை எடுத்து விட்டது.

Also read: திரிஷாவுடன் போட்டி போட்டு மூக்குடைந்த நடிகை.. லியோவால் களத்தில் குதிக்கும் குளிர்பான நடிகை

இதற்கு அடுத்து விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் சேர்ந்து விட்டார். அப்புறம் என்ன இது போதுமே இவருடைய மார்க்கெட் ரேட் கூடுவதற்கு. இதை வைத்தே அடுத்தடுத்த பட வாய்ப்புகளை இவருடைய புத்திசாலித்தனத்தால் கைப்பற்றுவதற்கு சரியான முறையில் காய் நகர்த்தி வருகிறார். அத்துடன் விஜய் உடன் ஜோடி சேர்ந்து விஜய்யின் ரசிகர்களை பிடித்து விட்டார்.

அதன்பின் அஜித்துக்கு ஜோடி சேர வேண்டும் என்று முயற்சி செய்து விடாமுயற்சி படத்தில் சேர்ந்து விட்டார். ஆனால் இந்தப் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கையில் அதற்குள் தனுஷ் நடிக்கும் அவரின் ஐம்பதாவது படத்தில் திரிஷா தான் நடிக்க வேண்டும் என்று பட குழு திட்டவட்டமாக முடிவு செய்து இவரை கமிட் செய்து விட்டார்கள்.

Also read: திரிஷா வலையில் சிக்கி எஸ்கேப் ஆன 4 ஹீரோக்கள்.. பல்வாள் தேவனால் நிச்சயதார்த்தத்தோடு நின்ற கல்யாணம்

இது மட்டும் இல்லாமல் எச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்திலும் திரிஷா தான் நடிப்பதற்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இவர் எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கினாலும் அதிலிருந்து மீண்டு வந்து சினிமாவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று இவருடைய புத்தியை கத்தி மாதிரி பயன்படுத்தி வருகிறார். ஆனால் நயன்தாரா இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டு மக்கு மாதிரி மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.

எப்படி த்ரிஷா இவருடைய அடுத்த ரவுண்டில் கலக்குகிறார் என்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதுவே நீடித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக இவர் தான் தமிழ் சினிமாவில் முதல் இடத்தில் கனவுக் கன்னியாக மீண்டும் வலம் வருவார். இந்த மாதிரியான ஒரு லக் வேறு எந்த கதாநாயகிக்கும் அமையவில்லை. இதை பார்க்கும் பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மறக்கும் அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் ஒவ்வொரு படத்திற்கும் ஸ்ட்ராங்காகவே வந்து கொண்டிருக்கிறது.

Also read: திரிஷாவின் முதல் வெற்றி படம்.. இல்லாத ஒரு விஷயத்துக்காக அடித்து கொள்ளும் நம்பர் நாயகிகள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்