ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

இளசுகளை திணறடித்த சில்க்கின் 5 கவர்ச்சி பாடல்கள்.. மறக்க முடியாத நேத்து ராத்திரி தூக்கம் போச்சு சாங்

ஒப்பனை கலைஞராக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த சில்க் ஸ்மிதா, அதன் பிறகு கவர்ச்சி நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து இளசுகளை கட்டிப்போட்டு வைத்திருந்தார். இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 450 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியவர். அதிலும் சில்க்கின் 5 கவர்ச்சி பாடல்களை இன்றும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு எவர்கிரீன் பாடலாக அமைந்துள்ளது.

நேத்து ராத்திரி தூக்கம் போச்சு: 1982 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் கமலஹாசன், அம்பிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சகலகலா வல்லன் என்ற சூப்பர் ஹிட் படம் திரையரங்கில் 175 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதிலும் நேத்து ராத்திரி தூக்கம் போச்சு என்ற பாடலில் கமலஹாசன் மற்றும் சில்க் இருவரும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டு இளசுகளை சூடேற்றினார்கள்.

Also Read: இளம் இயக்குனருக்கு அல்வா கொடுத்த ரஜினி.. அரவணைத்த கமல், பற்றி எரியும் ஈகோ

பொன்மேனி உருகுதே: இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு கமலஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் மூன்றாம் பிறை. இந்த படத்திற்காக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் சில்க் ஸ்மிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘பொன்மேனி உருகுதே’ என்ற பாடலில் கவர்ச்சியாக கமலஹாசன் மற்றும் சில்க் இருவரும் நடனமாடி பார்ப்போரை திணறடித்துள்ளனர். இதில் இவர்கள் இருவர் மட்டுமே தனித்து குரூப் டான்சர் இல்லாமல் போட்ட ஆட்டம் பார்க்கும் இளசுகளின் கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைந்தது.

ஆடி மாச காத்தடிக்க: ரஜினிகாந்த், ராதா நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளியான பாயும் புலி படத்தில் இடம்பெற்ற ‘ஆடி மாச காத்தடிக்க’ என்ற பாடல் இன்றும் இளசுகளை ஆட வைக்கிறது. இதில் சில்க் கவர்ச்சியான உடையில் ரஜினியுடன் போட்ட ஆட்டத்தை இப்போதும் ரசித்துப் பார்க்கின்றனர்.

Also Read: 90களில் நடிகர்கள் வாங்கிய சம்பள பட்டியல்.. உலக நாயகனை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய ரஜினி

அடியை மனம் நில்லுனா நிக்காதடி: 1984 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான நீங்கள் கேட்டவை என்ற படத்தில் தியாகராஜன் மற்றும் அர்ச்சனா இருவரும் ஜோடியாக நடித்திருப்பார்கள். இதில் சில்க் ஸ்மிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதிலும் இதில் இடம்பெற்றிருந்த ‘அடியே மனம் நில்லுனா’ என்ற பாடலுக்கு தியாகராஜன் மற்றும் சில்க் இருவரும் இணைந்து போட்ட குத்தாட்டம் இன்றும் திருவிழாக்களில் இடம்பெறும் முக்கிய பாடல்களாக உள்ளது. இந்த பாடலை கேட்டால் ஆடாத கால் கூட ஆட ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு துள்ளலான பாடலாக இருக்கும்.

மெல்ல மெல்ல என்னை தொட்டு: 1984 ஆம் ஆண்டு சிபி ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா உள்ளிட்ட நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிவாஜியின் இளைய மகனாக ரமேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ரவீந்தருடன் சில்க் ஆடிய ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு’ என்ற பாடல் இப்போதும் இளசுகளை குத்தாட்டம் போட வைக்கிறது.

இவ்வாறு சில்க் கவர்ச்சி நடனம் ஆடிய இந்த ஐந்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல், ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களின் லிஸ்டிலும் இடம்பெற்றுள்ளது. அதிலும் சில்க் ஸ்மிதாகாகவே நிறைய படங்கள் ஓடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

- Advertisement -

Trending News