கல்லூரி காலத்து ரோலேக்ஸ் மற்றும் மருது.. இதுவரை வெளிவராத லயோலா காலேஜ் போட்டோ

இப்போது முன்னணியில் இருக்கும் பல நடிகர்களுக்கும் ஆரம்பப் புள்ளியே லயோலா காலேஜ் தான். விஜய்யில் ஆரம்பித்து பல நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரும் அங்கு படித்து சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தவர்கள் தான். அதேபோன்று நடிகர் சூர்யாவும் தன் கல்லூரி படிப்பை லயோலா காலேஜில் தான் படித்திருக்கிறார்.

பிகாம் பட்டதாரியான அவர் அந்த கல்லூரியில் படித்து முடித்த பிறகு ஒரு கம்பெனியில் பணி புரிந்திருக்கிறார். அதன் பிறகு நடிக்கும் மீது இருந்த ஆர்வத்தில் சினிமா துறைக்கு வந்திருக்கிறார். அவரைப்போலவே லயோலா காலேஜில் படித்துவிட்டு இன்று சினிமாவில் ஒரு உயரத்தில் இருப்பவர்தான் விஷால். இன்னும் சொல்லப்போனால் அவர் சூர்யாவின் நண்பரும் கூட.

Also read: கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்

கல்லூரியில் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் இப்போது சினிமாவில் தங்களுக்கென ஒரு அந்தஸ்துடன் இருக்கிறார்கள். வெவ்வேறு காலகட்டத்தில் இவர்கள் சினிமாவில் அடி எடுத்து வைத்திருந்தாலும் தற்போது முன்னணி இடத்தை பிடித்துள்ள இருவரும் சிறு வயதில் எப்படி இருந்திருப்பார்கள் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அந்த வகையில் தற்போது சூர்யா, விஷால் இருவரும் கல்லூரி படிக்கும் போது சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் அதில் இருவரும் இளமை காலத்தில் நம்ப முடியாத அளவிற்கு சிறு பிள்ளைகள் போன்று இருக்கிறார்கள். அதிலும் சூர்யா ரொம்பவும் க்யூட்டாக இருக்கிறார்.

Also Read: சூர்யாவின் 42 வது படத்தின் தலைப்பு.. வெற்றியை உறுதி செய்த சிறுத்தை சிவா

அவர் கல்லூரி விழாவில் விஷால் அருகில் உட்கார்ந்து கொண்டு அவர் தோளில் கை போட்டபடி இருக்கிறார். விஷாலும் மீசை இல்லாமல் தலை நிறைய முடியுடன் அந்த போட்டோவில் சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். இந்த போட்டோவை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே இது தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Vishal-Surya
Vishal-Surya

மேலும் இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ப முடியாத ஆச்சரியத்தில் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். மேலும் ரோலக்ஸ் சிறுவயதில் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இதுவரை வெளி வராத இந்த அரிய போட்டோ ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Also read: கான்ஸ்டபிள் முருகானந்தமாக வாழ்ந்திருக்கும் விஷால்.. லத்தி பட முழு விமர்சனம்

- Advertisement -