சிரிச்ச மாறியே மறுபக்கத்தை காட்டும் உதயநிதி.. ஷங்கரை கண்டுகொள்ளாமல் ஓவர் அலைக்கழிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், பாடல் காட்சிக்காக வெளிநாடுகளுக்கும், பல தீவுகளுக்கும் சென்று வருபவர். ஆனால் இன்று அவருக்கு சென்னையில் உள்ள எழிலகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது எப்போதும் நடக்கும் பொதுவான விஷயம் என்று கூட சொல்லலாம் ஆனால் ஷங்கருக்கும் மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.

ஷங்கருக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே எழிலகத்தில் தான் ஒரு மிகப்பெரிய அரசியல் வாரிசு படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது சினிமா துறையை தாண்டி சினிமாவில் அரசியலும் வேலை செய்கிறது என்பதையே காட்டுகிறது. ஷங்கர் அந்த அரசியல் வாரிசிடம் சென்று அனுமதி கோரியும் அந்த வாரிசும் கைவிட்டுவிட்டார்.

சங்கர் ஊழலுக்கு எதிராக ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன் என்று படங்களை எடுத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது 1996 ஆம் ஆண்டு கமலஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி செந்தில், கஸ்தூரி என பல நட்சத்திரங்களை கொண்டு இயக்குனர் ஷங்கர் இந்தியன் படம் எடுத்தார். இந்தப்படம் ஊழலுக்கு எதிரான படம் எனவே இந்தப்படத்தில் அதிகமாக அரசு அலுவலகங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்த குறுகிய நாளிலேயே எதிர்பாராத விபத்து நடந்ததினால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன, அதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கும் வந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்பட்டதால் அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்காக எழிலகத்தில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ஷங்கர் அனுமதி கோரியிருந்தார், ஆனால் இயக்குனருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஷங்கர் உதயநிதியிடம் உதவி கோரியிருக்கிரார், ஆனால் உதயநிதி தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார்.

ஷங்கருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நடிகரும், ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும், சேப்பாக்கம் தொகுதியிலன் எம்எல்ஏ வும் ஆன உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்திற்கான படக்காட்சிகள் எழிலகத்தில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்குகிறார்.