பாடாய்படுத்தும் வெற்றி இயக்குனர்.. முடியல! நடிப்புக்கு முழுக்கு போடும் உதயநிதி ஸ்டாலின்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் உள்ள களமிறங்கிய உதயநிதி ஸடாலின் தற்போது திமுக எம்எல்ஏ ஆன பிறகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே மாமனிதன் திரைப்படத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பதிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் நடிகர் உதயநிதி ஸ்டாலின்,நடிகை தன்யா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் வெற்றி அடைந்த நிலையில், தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மாமனிதன் திரைப்படத்தைப் பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடிக்கும்போது பத்து டேக் தான் வாங்கியதாகவும், ஆனால் மாரி செல்வராஜின் மாமனிதன் திரைப்படத்தில் நடிக்கும் போது 50க்கும் மேற்பட்ட டேக்குகள் ஆவதால் படத்தின் கால அவகாசம் நீண்டுகொண்டே போகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் மாமனிதன் திரைப்படத்தில் பன்றிகள்,ராஜபாளையம் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளோடு படத்தில் நடித்துள்ளதாகவும், இது தனக்கு புது அனுபவமாக இருந்ததாகவும், உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஆனால் இப்படத்தில் அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் அதிக சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படம் ரிலீஸாவதற்கு அதிகமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து விலகி கொள்ளலாம் என்ற யோசனையில் உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் அரசல்புரசலாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் மாமனிதன் திரைப்படம் தான் தனது கடைசியாக என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இப்படத்தில் உதயநிதி நடித்தால் தேவையில்லாத சர்ச்சையில் சிக்கி கொள்ளும் வாய்ப்பு உள்ளதால் இதனால் தனக்கு கொடுக்க உள்ள அமைச்சரவை பதவிக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற யோசனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.