அள்ள அள்ள குறையாத கஜானா, தொட்டதெல்லாம் பொன்னாகுது.. பல்லாயிரம் கோடி முதலீட்டில் உதயநிதி

உதயநிதி தற்போது சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் மாஸ் காட்டி வருகிறார். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு உதயநிதி என்றால் ரசிகர்களுக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் இப்போது நடிகர், அமைச்சர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல பரிமாணங்களை கொண்டு உள்ளார்.

மேலும் ஒரு நடிகராக உதயநிதியின் கடைசி படம் மாமனிதனாக இருக்கும் என்று அவரே கூறியிருந்தார். இப்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் உதயநிதி தான் வெளியிட்டு வருகிறார். இதனால் தயாரிப்பாளருக்கும் சரி, திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்த வருகிறது.

Also Read : இணையத்தில் லீக்கான புகைப்படம்.. பதறிப்போய் கிருத்திகா உதயநிதி வெளியிட்ட ட்விட்டர் பதிவு

இவ்வாறு உதயநிதியின் கல்லா அள்ள அள்ள குறையாமல் தொடர்ந்து நிரம்பி வருகிறது. மேலும் அவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுவதால் தற்போது தொலைக்காட்சியில் மும்மரம் காட்ட உள்ளார். அதாவது ரசிகர்களின் பேர் ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கும் பிளாக் ஷீப் என்ற யூடியூப் சேனலை உதயநிதி வாங்கியுள்ளார்.

இப்போது சித்திரம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை பிளாக் ஷீப் என்று மாற்ற உள்ளனர். இந்த தொலைக்காட்சிக்காக ஓடிடி புதிய படங்களை வாங்கும் முயற்சியில் உதயநிதி இறங்கி உள்ளாராம். இதற்காக தற்போது 2000 கோடி உதயநிதி முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : மொத்தமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உதயநிதி.. அமைச்சர் ஆனாலும் விட்டுக் கொடுக்க முடியாது

ஆகையால் வெள்ளித்திரை போதாது என சின்னதிரையிலும் தற்போது உதயநிதி கலக்கி வருகிறார். ஒரு காலத்தில் கலாநிதி மாறன் தொட்டதெல்லாம் வெற்றி கண்டு வந்தார். இப்போது அந்த இடத்தை உதயநிதி பிடித்துள்ளார். அரசியலில் முழுவிச்சாக ஈடுபட்டாலும் சினிமாவை கைவிட உதயநிதிக்கு மனமில்லை.

இதனால்தான் தன்னால் முடிந்த அளவு சினிமாவில் அதிகம் முதலீடை உதயநிதி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அதன் மூலம் நல்ல வருமானத்தையும் தொடர்ந்து ஈட்டி வருகிறார். இந்நிலையில் இப்போது சின்னத்திரையில் உதயநிதி இறங்கி உள்ளதால் மற்ற தொலைக்காட்சிகள் மிகுந்த பீதியில் இருக்கின்றனர்.

Also Read : விஜய்யின் பிசினஸையே நொறுக்கிய உதயநிதி.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய முரட்டு பிரபலம்

- Advertisement -