அண்ணாத்த வெற்றியா? தோல்வியா? கிளறிவிட்ட உதயநிதி.. ஜெயிலர் பட மார்க்கெட்டை இறக்க செய்யும் சதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த அந்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 240 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

ஆனாலும் இப்போது வரை அந்த திரைப்படம் தோல்வி திரைப்படம் தான் என்ற ஒரு பிம்பம் உருவாகி இருக்கிறது. இது குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான பிறகும் கூட சிலர் இப்படத்தை தோல்வி படம் என்று கூறி வருகின்றனர். மேலும் அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றி திரைப்படம் தான் என்று விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூட பலமுறை தெரிவித்து இருந்தார்.

Also read: ஜெய்லர் பட வில்லனை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

அதன் பிறகு ஒரு வழியாக அண்ணாத்த திரைப்பட சர்ச்சை அடங்கிப் போனது. ஆனால் தற்போது அது மீண்டும் உதயநிதியின் மூலம் கிளறப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த போது அண்ணாத்த திரைப்படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வசூல் ரீதியாக இந்த திரைப்படத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்து இருக்கலாம் என்று கூறினார்.

இதன் மூலம் மறைமுகமாக அவர் அண்ணாத்த வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இன்னும் இந்த திரைப்படத்தை நான் பார்க்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

Also read: நடிக்க முடியாமல் போன ரஜினி, நஷ்டத்தை ஈடு கட்டிய பெரிய மனுஷன்.. இப்பவும் ஸ்டாராக இருக்க இதுதான் காரணம்

ஏனென்றால் தற்போது ரஜினி மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உதயநிதியின் பேச்சு ஜெயிலர் படத்திற்கு நிச்சயம் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

அது மட்டுமல்லாமல் ரஜினியின் மார்க்கெட்டை குறைப்பதற்காகவே அவர் இப்படி கூறியிருப்பதாகவும் ரஜினி ரசிகர்கள் தற்போது தெரிவித்து வருகின்றனர். இப்போது அண்ணாத்த படத்தின் வசூல் பற்றி பேசும் உதயநிதி இதற்கு முன்பு ஒரு பேட்டியில் அது வெற்றி திரைப்படம் தான் என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோவையும் தற்போது ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது உதயநிதியின் இந்த அந்தர்பல்டி பேச்சு ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Also read: இரண்டரை கோடியை தூக்கி கொடுத்த உதயநிதி.. கட்சிக்கு நிதி வேண்டாம் என மெய்சிலிர்க்க வைத்த கமல்

- Advertisement -