கர்ணன் படத்தில் இவ்வளவு பெரிய தப்பு இருக்கு.. ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் பதிவை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் கர்ணன். படத்தைப் பார்த்தவர்கள் அனைவருமே கர்ணன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இருந்தாலும் மாரி செல்வராஜ் ஒருபக்கம் தேவையில்லாமல் மீண்டும் சாதிப் பிரச்சினைகளை தூண்டிவிடுகிறார் என்ற வாதமும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதையெல்லாம் தற்போதைக்கு படக்குழுவினர் கண்டு கொள்வதாக இல்லை.

கர்ணன் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் கர்ணன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தங்களுடைய கழகத்திற்கு கலங்கம் விளைவிக்கும் செயலை படத்தில் காட்டியுள்ளதை படக்குழுவினருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்ணன் படத்தின் முக்கிய கருவே கொடியன்குளம் என்ற பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால் படத்தில் 1997 ஆம் ஆண்டு அந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் உண்மையில் கொடியன்குளம் சம்பவம் 1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்ததாக ஆதாரத்துடன் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் சுட்டிக்காட்டினாராம் உதயநிதி ஸ்டாலின். இதன் காரணமாக இன்னும் இரு தினங்களில் தியேட்டர்களில் அந்த மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார்களாம்.

udhayanidhi-stalin-tweet-about-karnan
udhayanidhi-stalin-tweet-about-karnan

தங்களுடைய வருங்கால ஆட்சிக்கு தடைவிதிக்கும் விதமாக இருந்த இந்த படத்தின் சில காட்சிகளை உணர்ந்து உதயநிதி ஸ்டாலின் உடனடியாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு விளக்கம் கொடுத்தது பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்