வேறு மாதிரி யோசிக்கும் உதயநிதி.. அப்பாவை மிஞ்சும் புத்திசாலித்தனம்!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு மாமன்னன் படத்தை நடித்து முடித்துவிட்டு முழுவதும் அரசியலில் ஈடுபட உதயநிதி திட்டமிட்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின், அரசியல் பிரவேசம் எடுத்ததில் இருந்து எல்லா பக்கமும் அவரின் பேச்சு தான். எல்லா இடங்களிலும் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருகிறார். மக்களுக்காக பல நல்ல விஷயங்களை கொண்டு வருகிறார்.

தந்தையான ஸ்டாலினை சில இடங்களில் மிஞ்சும் அளவுக்கு அரசியலில் விளையாடுகிறார். சட்டமன்றத்தில் தன் தடாலடி பேச்சுக்கள் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். சினிமா துறையில் பல நல்ல விஷயங்களை கொண்டு வருகிறார்.

இவருடைய நெஞ்சுக்கு நீதி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் 4 மணி காட்சி வைக்கக்கூடாது என்று ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். மக்களை கஷ்டப்பட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி டான் படங்களை ஒளிபரப்பி வரும் பெரிய தியேட்டர்களில் இருந்து எடுக்க வேண்டாம். சிறிய தியேட்டர்களில் இருந்து வேண்டுமென்றால் எடுத்து நெஞ்சுக்கு நீதி படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்.

இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது தன் படமான நெஞ்சுக்கு நீதியை இப்படி சிறிய தியேட்டரிகளில் ஒளிபரப்பு செய்யவைத்து உண்மையில் கெத்து காட்டாத பெரிய மனிதர் என்று காட்டியுள்ளார்.