மீண்டும் களத்தில் குதிக்கும் உதயநிதி ஸ்டாலின்.. தனுஷ் பட வெற்றி இயக்குனருடன் புதுப்படத்தில் ஒப்பந்தம்!

இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் படப்பிடிப்பில் இறங்க உள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிகர் தயாரிப்பாளர் மட்டுமின்றி தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இருப்பினும் அவர் மிகவும் எளிமையாகவும் எதார்த்தமாகவும் பழகும் தன்மை கொண்டவர் ஆவார்.

ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின். ‘குருவி’ திரைப்படம் உதயநிதி தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.

நடிப்பிலும் அதிக ஆர்வம் கொண்ட உதயநிதி 2012 ஆம் ஆண்டு வெளிவந்த “ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, மனிதன், சரவணன் இருக்க பயமேன் மற்றும் பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தியவர். தேர்தல் முடிந்த பின்னும் மக்கள் பணியில் மிகுந்த ஆர்வமாக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களுக்கு பிரேக் கொடுத்திருந்தார்.

தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இறங்குகிறார் உதயநிதி. மாரிசெல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஒப்புதல் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

article 15 remake

‘ஆர்டிகல் 15 ‘ ரீமேக் ,’கண்ணை நம்பாதே ‘ஆகிய படங்கள் முடிந்து பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தில் உதயநிதி நடிக்க உள்ளாராம். இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -