நாங்க கேட்டும் அவங்க தரல.. வாரிசு பஞ்சாயத்து குறித்து மௌனம் கலைத்த உதயநிதி

8 வருடங்களுக்குப் பிறகு அஜித், விஜய் இருவரும் மீண்டும் திரையில் மோதிக் கொள்வதால் இந்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாகும் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு உள்ளிட்ட இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.

அதிலும் இந்த இரண்டு படங்களையும் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை போட்டி போட்டுக் கொண்டு கைப்பற்றுகின்றனர். முதலில் வாரிசு படம் உதயநிதி வாங்குகிறார்கள் என்ற சர்ச்சை ரொம்ப நாளாவே இழுத்தடித்து வருகிறது.

Also Read: ரெட் ஜெயிண்ட்டை எதிர்த்து களத்தில் குதித்த பிரபல நிறுவனம்.. சொன்ன தேதியில் மோதிப் பார்க்க ரெடியான வாரிசு

எப்பொழுதுமே பெரிய படம் என்றால் அது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் தான் வாங்கி விநியோகம் செய்யும். ஆனால் இப்பொழுது உதயநிதியிடம் நீங்கள் ஏன் விஜய்யின் வாரிசு படத்தை வாங்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த உதயநிதி துணிவு எங்கள் கையில் தான் இருக்கிறது, நாங்கள் வாங்கி விட்டோம். ஆனால் வாரிசு படம் எங்களுக்கு கொடுக்க வாய்ப்பு வந்தால் நாங்கள் கட்டாயமாக போட்டியிட்டு அதை வாங்கி வெளியிடுவோம் என்று உதயநிதி பதிலளித்தார்.

Also Read: என்ன மீறி யாரு வாங்குறான்னு பாக்கலாம்.. உதயநிதியிடம் சரண்டர் ஆன வாரிசு படக்குழு

ஆனால்  தமிழகத்தில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை சேர்ந்த லலித் குமார் பெற்றிருக்கிறார். மேலும் துணிவு படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனமும், வெளி நாடுகளில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் வெளியிட உள்ளது. இதைத் தவிர சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரெட் ஜெயிண்ட் தான் வாரிசு படத்தை வெளியிட உள்ளனர்.

எனவே வரும் பொங்கல் என்று தமிழகத்தில் வாரிசு படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற லலித் குமாரும், துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற உதயநிதியும் வசூல் ரீதியாக இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள போகின்றனர்.

Also Read: நீங்க அனுப்புனா மட்டும் செய்தி, அதே நான் செஞ்சா.? அஜித்துக்கு மறைமுகமான மிரட்டல் விட்ட விஜய்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -