வாரிசு படத்திற்கு போட்டியாக துணிவுடன் வரும் உதயநிதி.. கலெக்ஷன் பயத்தில் இருக்கும் தியேட்டர் அதிபர்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தீபாவளிக்கு போஸ்டருடன் வெளியானது. அந்த வகையில் இப்படத்தின் தமிழக உரிமையை தயாரிப்பாளர் லலித் வாங்கி இருக்கிறார்.

அதேபோன்று வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலை குறி வைத்து தயாராகி வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள அந்த திரைப்படத்தை உதயநிதி தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிட இருக்கிறார். அந்த வகையில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி ஒன்று நிலவுகிறது.

Also read : அஜித், விஜய், விக்ரம் என கலக்கிய இயக்குனர்.. ஒரு வெற்றிப் படத்திற்காக 15 வருடம் போராடும் அவலம்

மேலும் துணிவு திரைப்படத்தை வாரிசு திரைப்படத்துடன் வெளியிட்டே ஆக வேண்டும் என்ற முடிவில் உதயநிதி ரொம்பவும் கரார் காட்டுகிறாராம். அதனால் வினோத் படப்பிடிப்பை விரைந்து முடிக்க இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் உதயநிதியின் இந்த முடிவில் தியேட்டர் அதிபர்கள் தான் கடும் அச்சத்தில் இருக்கின்றனர்.

ஏனென்றால் இரண்டு நடிகர்களுமே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள டாப் நடிகர்கள். இதனால் இருவரின் படங்களுமே வசூலில் மாஸ் காட்டும். ஆனால் இவர்களின் படங்கள் தனித்தனியாக வெளியானால் மட்டுமே படத்தை வாங்குபவர்களுக்கு லாபம் கிடைக்கும். இப்படி ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் வசூல் ரீதியாக கடும் பாதிப்பு ஏற்படும்.

Also read : மகேஷ் பாபுவின் இந்த பட காப்பி தான் விஜய்யின் வாரிசு.. ஆதாரத்துடன் வெளியான புகைப்படத்தால் வெடித்தது சர்ச்சை

இப்படி ஒரு கலக்கத்தில் தான் தற்போது தியேட்டர் அதிபர்கள் இருக்கின்றனர். இப்படி ஒரு சிக்கல் இருந்தாலும் உதயநிதி தன் முடிவிலிருந்து ஒருபோதும் பின் வாங்க மாட்டார். இது தியேட்டர் அதிபர்களுக்கு மட்டுமல்லாமல் அஜித்திற்கும் ஏமாற்றத்தை தான் கொடுத்திருக்கிறது.

ஏனென்றால் அஜித்திற்கு எப்போதுமே ஒரு சென்டிமென்ட் இருக்கிறது. அதாவது அவருடைய படம் எப்போதுமே வியாழக்கிழமைகளில் தான் ரிலீஸ் ஆகும். அப்படி நாள் பார்த்து தான் அஜித் தன்னுடைய படத்தை வெளியிடுவார். ஆனால் இப்படம் உதயநிதியின் கைக்கு தற்போது சென்று விட்டதால் அஜித்தின் ஆசை நிராசையாக போயிருக்கிறது.

Also read : ஒரு பக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் தளபதி மகிழ்ச்சி.. ஜவ்வாக இழுத்துக் கொண்டு போகும் அஜித் பட இயக்குனர்

- Advertisement -