விஜய் படும் அவமானங்களை தடுக்க உதயநிதி போட்ட கட்டளை.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

Vijay In Leo: தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் என்றால் அது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் தான். இப்படத்தை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் லியோ படத்துக்கு ஏதாவது பிரச்சனைகள் சர்ச்சையாக வெடித்துக் கொண்டு வருகிறது. பொதுவாக விஜய் படம் ரிலீசாகுது என்றாலே அதில் ஏதாவது ஒரு சர்ச்சை ஏற்பட்டு விடுகிறது.

அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு தொடர்ந்து பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அதில் ஆரம்பத்தில் நான் ரெடி தான் பாடலில் புகை பிடிப்பது போல் நடித்து தவறு என்று பிரச்சனை கிளம்பியது. அதன் பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக வைக்க ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

ஆனால் இதை நடத்த முடியாமல் போய்விட்டது. அதற்கு காரணம் அந்த இடத்திற்கு மீறியும் அதிக டிக்கெட்கள் வேண்டும் என்று கேட்டதால் மொத்தமாகவே ஆடியோ லாஞ்சை கேன்சல் பண்ணி விட்டார்கள். அதேபோல லியோ படத்தின் டிரைலரை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் மிகவும் மட்டமான செயல்களை செய்து விஜய் பெயருக்கு பெருத்த அவமானத்தை தேடி கொடுத்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் விஜய் படும் அவமானங்களை தடுக்கும் பொருட்டாக உதயநிதி தற்போது பல கட்டளைகளை போலீசாரிடம் போட்டிருக்கிறார். தற்போது அரசியலில் இருப்பதால் அதன் பவரை வைத்து விஜய்க்கு உதவுகிறார். அதாவது லியோ படம் ரிலீஸ் ஆகும் பொழுது ரசிகர்களால் எந்தவித தொந்தரவும் வரக்கூடாது. முக்கியமாக அவர்களால் டிராபிக் ஆகி பொதுமக்களுக்கு இடையூறும் வரக்கூடாது என்று போலீஸிடம் கூறியிருக்கிறார்.

அப்படி ஏதாவது அவர்களால் பிரச்சனை வந்தால் அதை கிளியர் பண்ண வேண்டும். அதற்காக இடையூறு பண்ணும் ரசிகர்களை அரெஸ்ட் கூட பண்ணுங்க. அதையும் மீறி தியேட்டர் வெளியே ஏதாவது பிரச்சனை வரப்போகிறது என்றால் அந்தத் தியேட்டரிலேயே படத்தை போட வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

அப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தால் தியேட்டர் குள்ளேயே அழிச்சாட்டியத்தை வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மொத்தமும் தப்பாகி விடும் என்று பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார். இது எல்லாம் உதயநிதி செய்வதற்கு காரணம் என்னவென்றால் தற்போது விஜய் அரசியலில் வர இருப்பதால், அவர் படத்திற்கு ஏற்படும் இடைஞ்சல்களை தவிர்த்து எப்படியாவது நம் பக்கம் விஜய்யை திருப்பி விட வேண்டும் என்ற காரணத்திற்காக உதவி செய்து வருகிறார்.