அவசரப்பட்டு சார்பட்டா படத்தை மிஸ் பண்ணிட்டோமே.. வருத்தத்தில் சகோதர நடிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் இரண்டு நடிகர்கள் பா ரஞ்சித் இயக்கிய சார்பட்டா படத்தை மிஸ் செய்து விட்டதாக தற்போது தங்களுடைய வட்டாரங்களில் சொல்லி புலம்பி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. எழுபதுகளில் நடக்கும் குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்தது இந்த திரைப்படம்.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறி வருகின்றனர்.

ஆனால் சார்பட்டா பரம்பரை படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி தான். மெட்ராஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்வதாக அப்போதே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது கார்த்திக்கு சொல்லப்பட்டது இந்த சார்பட்டா கதைதான். அதை தொடர்ந்து இதே கதை சூர்யாவுக்கும் சொல்லப்பட்டதாம். ஆனால் இருவருமே இந்த படத்தில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டுமா? என யோசித்தார்களாம்.

மேலும் இந்த படத்தை ஒப்புக் கொண்டால் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் தனக்கு வந்த வாய்ப்பை தவற விடாமல் கெட்டியாக பிடித்து தன்னுடைய கேரியரில் முத்திரை பதிக்கும் படமாக மாற்றி மார்க்கெட்டையும் உயர்த்தியுள்ளார் ஆர்யா.

suriya-karthik-cinemapettai
suriya-karthik-cinemapettai

Stay Connected

1,170,254FansLike
132,060FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -