அடுத்தடுத்து தனுஷ் மார்க்கெட்டை இறக்கிய 2 பெரும் புள்ளிகள்.. மனசாட்சியே இல்லையா என கதறும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் தனுஷ். அவரைப் பொறுத்தவரை எப்போதுமே கதை தேர்வு செய்வதில் கில்லாடி. அவருடைய ஒவ்வொரு படமும் அவருடைய பேர் சொல்லும் விதமாக இருக்கும். இதற்காகவே தேசிய விருது உட்பட பல விருதுகளை அவர் பெற்றிருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக அவர் கதையை தேர்வு செய்வதில் பல சொதப்பல்கலை செய்து வருவதாக அவருடைய ரசிகர்கள் கருதுகின்றனர். தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். இதனாலேயே ஒரு படத்தின் கதையை கேட்டு விட்டால் போதும் அது வெற்றி பெறுமா இல்லையா என்பதை கணித்து விடுவார்.

அப்படிப்பட்ட அவர் ஜகமே தந்திரம், மாறன் போன்ற திரைப்படங்களை எப்படி ஒப்புக்கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தின் கதையில் ஒரு துளி சுவாரஸ்யம் கூட கிடையாது.

அதேபோன்று கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியான மாறன் திரைப்படமும் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் இருக்கிறது. இந்த இரண்டு இளம் இயக்குனர்களும் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்கள். ஆனால் அவர்களின் இந்த படங்களை பார்க்கும் போது ஏன் இப்படி சொதப்பினார்கள் என்ற கேள்விதான் எழுகிறது.

அதுவும் சொல்லி வைத்தாற் போன்று இவர்கள் இருவரும் சேர்ந்து தனுஷின் உச்சகட்ட மார்க்கெட்டை இறக்கி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் தனுஷ் தற்போது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

இது அவருடைய சினிமா வாழ்க்கையில் சில பின்னடைவுகளை ஏற்படுத்திவிடும் என்று பலரும் கருத்து கூறி வரும் இந்த நிலையில் இப்படி தொடர் தோல்விகள் அவருடைய மார்க்கெட்டை குறைத்து விடுமோ என்று அவரது ரசிகர்கள் பயப்படுகின்றனர். மேலும் தனுசை இப்படி வைத்து செய்த அந்த இரண்டு இயக்குனர்களையும் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று திட்டி தீர்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்