திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

நம்பி இருந்த 2 படங்களும் கோவிந்தா.. சிம்ரன் ஏக்கத்தில் இருந்த ஹீரோ படமும் தள்ளாடும் பரிதாபம்

90ஸ் கிட்ஸ் அவர்களிடம், உங்கள் கனவு கன்னி யார் என்று கேட்டால் எல்லாரும் ஒரே பதில் சொல்வது நடிகை சிம்ரன் அவர்களை தான். இவருடைய படம் என்றாலே பார்ப்பதற்கு அவ்வளவு ஆசையாக இருக்கும். இவர் நடிப்பிலும் மட்டுமல்லாமல், நடனத்திலும் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் முன்னணி ஹீரோகளுடன் வலம் வந்தவர்.

அப்படிப்பட்ட இவர் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் முழுமையாக ஈடுபாடு காட்டி வந்தார். பின்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார். இதனை அடுத்து சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த சீமராஜா படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார்.

Also read: முக்கி முக்கி 50வது படத்தில் நடிக்கும் இடுப்பழகி சிம்ரன்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

இதனைத் தொடர்ந்து பேட்டை, ராக்கெட்டரி போன்ற படங்களில் மூலம் மறுபடியும் நடித்து இவருடைய ரசிகர்களை கவர்ந்தார். அதனால் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இவருக்கு பெரிதாக சொல்லும் படி இப்பொழுது வரை எந்த படங்களும் அமையவில்லை.

மேலும் இவர் நடித்து பெரிதும் எதிர்பார்த்த இரண்டு படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இழுத்து அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த படங்கள் ரிலீஸ் ஆகுமா என்று கூட தெரியவில்லை அந்த அளவுக்கு இருக்கிறது. இவர் ஹீரோயினாக நடித்த காலத்தில் எல்லா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார். அதிலும் பிரசாந்த் கூட ஐந்து படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

Also read: 90ஸ் கனவு கன்னி சிம்ரனுடன் இணைந்து பிரசாந்த் நடித்த 5 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அந்தகன்

அப்போதைய காலத்தில் இவர்கள் இரண்டு பேருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆகி கொண்டிருந்தது. பின்பு பிரசாந்த் அவர்களும் ஒரு கட்டத்தில் சில பிரச்சனை காரணமாக நீண்ட நாட்கள் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் தற்போது இவரும் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக மறுபடியும் நடிக்கும் படம் தான் அந்தகன். இந்தப் படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் அவர்கள் இணைகிறார்கள்.

அதனால் இவர்கள் கூட்டணியில் அமையும் படம் கண்டிப்பாக வெற்றி படமாக இருவருக்கும் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் நீண்ட வருடங்களாக தாமதமாகி இருக்கிறது. அத்துடன் துருவ நட்சத்திரம் படத்தையும் சிம்ரன் அதிக அளவில் ரிலீசுக்கு எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த படமும் இன்னும் வெளிவரவில்லை. இப்படி சிம்ரன் நம்பியிருந்த இரண்டு படங்களுமே இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் பெரிய ஏக்கத்தில் மிகவும் பரிதாபமாக இருந்து வருகிறார்.

Also read: அடுத்தடுத்து வெளிவர உள்ள விக்ரமின் 5 படங்கள்.. உயிரைக் கொடுத்து போராடும் சியான்

- Advertisement -

Trending News