ஒரே நிகழ்ச்சியில் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற விஜய் டிவி பிரபலங்கள்.. பிரியங்காவை ஓரம் கட்டிய நடிகர்

சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் ரக்சனும், பாலாவும். விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வருபவர் ரக்சன். இந்நிலையில் ரக்சன் தொகுத்து வழங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடியனாக வலம் வருபவர் பாலா.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டில், பிரபலமான தமிழ் நகைச்சுவை ரியாலிட்டி ஷோவான கலக்க போவது யாரு சீசன் 6 இல் பங்கேற்றார். இதில் வினோத் உடன் இணைந்து பாலா பட்டத்தை வென்றார். மேலும் நிறைய பாராட்டுகளையும், ரசிகர்களையும் பெற்றார். அது மட்டுமின்றி 2017ஆம் ஆண்டு காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்தால் பாலா கௌரவிக்கப்பட்டார்.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த “ஜுங்கா” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பாலா பிரபலமான நகைச்சுவை குக்கரி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியிலும் பங்கேற்று தனது ரசிகர் பட்டாளத்தை வளர்த்துக் கொண்டார். ஹரிஷ் ராம் எல்எச் இயக்கிய “தும்பா” என்ற சாகச நகைச்சுவை படத்திலும் நடித்துள்ளார். 

பாலா, யோகி பாபுவுடன் காக்டெய்ல் மற்றும் வரலட்சுமி சரத்குமாருடன் டேனி படத்திலும் நடித்துள்ளார். ரக்சன் பட்டப்படிப்பை முடித்த பிறகு தொழில் ரீதியாக ஆங்கரிங் செய்ய ஆரம்பித்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளர் அறிமுகமானார்.

சீசன் 5 இல் விஜய் டிவி காமெடி ரியாலிட்டி ஷோவான கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அவர் பிரபலமடைந்தார். பின்னர் விஜய் டிவியின் ஆஸ்தான ஆங்கராகவே மாறிப்போனார்.குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் செய்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை விரிவுப்படுத்தினார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா ஆகியோர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் முலம் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது விஜய் டிவி சார்பில் வழங்கப்படும் விஜய் டெலிவிஷன் அவார்டில் பாலா சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதும், ரக்சன் சிறந்த தொகுப்பாளருக்கான விருதும் பெற்றுள்ளார். இந்த விருதினை வென்ற இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்