வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டிவிட்டர் தொகுப்பாளர், சினிமா விமர்சகர் கவுசிக் திடீர் மரணம்

பிரபல யூடியூப் சேனலின் தொகுப்பாளராகவும், சமூகவலைத்தளங்களில் சினிமா விமர்சனங்கள் எழுதிக் கொண்டிருந்த பிரபலம் இன்று உயிரிழந்து இருக்கிறார்.

சினிமா விமர்சனங்களையும் அந்த படத்தை ட்ராக் செய்து அதன் வசூல் விவரங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிரக்கூடியவர் இவர்.

ஒரு படம் ரிலீசான பின்பு அந்த படத்தின் ரிவியூவை தெரிந்து கொள்ள ரசிகர்கள் தேடும் வெகு சிலரில் இந்த பிரபலமும் முக்கியமானவராக இருந்து இருக்கிறார்.

“சினிமா என்பது என்னை பொறுத்தவரை வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல என் வாழ்க்கைக்கான உந்துதல் மாற்று என்னுடைய குறிக்கோள்” என்று கூறியுள்ளார்.

இவர் சினிமா விமர்சகர் மட்டுமல்லாது பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் ஆகவும் இருந்தார், பாக்ஸ் ஆபிஸ் டேட்டா வும் கச்சிதமாக கொடுப்பவர்.

பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராகவும் இருந்த கௌஷிக் LM இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் கடைசியாக ஆகஸ்ட் 11 அன்று ‘லால் சிங் தத்’ படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ளார்.

- Advertisement -

Trending News