பிக்பாஸால் கதிகலங்கும் பிரபல தொலைக்காட்சி சேனல்கள்.. டிஆர்பி-யை ஏற்ற புதிய யுத்தி.!

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க பட்ட நிகழ்ச்சி  தமிழ் பிக்பாஸ். 2017 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ், நான்கு யுகங்களைக் கடந்து தற்போது 5-வது சீசனுக்கு நுழைந்துள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரமாண்டமாக அமைக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்கள் 100 நாட்கள் தங்க வைக்கப்படுவர். ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களின் பரிந்துரைப்படி மக்கள் வாக்களித்து ஒருவரை வெளியேற்றுவர். இறுதி வாரத்தில் உள்ள மூன்று போட்டியாளர்களில் ஒருவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் அத்தனை செயல்பாடுகளும் மக்களுக்கு காட்டப்படும். வெளியுலக தொடர்பின்றி அந்த வீட்டுக்குள் வாழும் போட்டியாளர்கள் பிக்பாசால் கொடுக்கப்படும் கடுமையான டாஸ்க்குகளில் பங்கேற்று தன் திறமையை காட்ட வேண்டும்.இதுவே இந்த நிகழ்ச்சியின் விதிமுறை.

தமிழ் பிக் பாஸ் நேற்று உலக நாயகன் அவர்களால் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. பிக்பாஸ் வீடு இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாகவும் கலை நயத்தோடும் அமைக்கப்பட்டிருந்தது. இத்தனை நாட்களாக எப்பொழுது தொடங்கும் என்று காத்திருந்த மக்கள் நேற்று நிகழ்ச்சிகள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர்.

ஒவ்வொரு வருடமும் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களின் வரவேற்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. பிக்பாஸ் தொடங்கப்படும் நேரத்தில் மக்கள் வேறு எந்த நிகழ்ச்சியையும் பார்ப்பதில்லை. இதனால் கதிகலங்கிய பல தொலைக்காட்சி சேனல்களும் மக்களை கவர்வதற்காகவே ஞாயிறு அன்றும் சீரியல்களை ஒளிபரப்ப ஆரம்பித்தது. இருப்பினும் மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த வகையில் இந்த வருடமும் சில முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் மக்களை கவர்வதற்கு பல யுக்திகளை கையாள உள்ளனர்.

kamal-bigg-boss-season5
kamal-bigg-boss-season5

இதற்கு நேர் மாறாக நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளிலேயே பல மீம்ஸ்களும், ட்ரோல்கள்களும் சமூக வலைதளங்களில் வலம் வர தொடங்கிவிட்டது. இனி வரும் வாரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை காண மக்கள் பலரும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்