ஹாலிவுட் படத்தை அட்டை காப்பியடித்த திரிஷாவின் ராங்கி.. தளபதி 67 பட நடிகைக்கு வந்த சோதனை

திரிஷா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நம்பர் ஒன் நடிகை என்ற பெயரை வாங்கி இருந்தார். மேலும் டாப் நடிகர்கள் அனைவரோடும் த்ரிஷா நடித்துள்ளார். ஆனால் சில வருடங்களில் தமிழ் சினிமாவில் அவருக்கு மார்க்கெட் இல்லாத காரணத்தினால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் திரிஷாவுக்கு ஆதரவு பெருகி உள்ளது. இப்போது அவரது நடிப்பில் ராங்கி படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ஜர்னலிஸ்டாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் திரிஷா நடித்திருந்தார்.

Also Read : கட்டுக்கடங்காத திரிஷாவின் ராங்கி.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ராங்கி படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க ஹாலிவுட் படத்தின் கதையை அப்படியே ராங்கி பட குழுவினர் காப்பியடித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு திமூர் பெக்மாம்பேடோவ் இயக்கத்தில் வெளியான ப்ரொபைல் படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்துள்ளனர்.

மேலும் அப்படத்தில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினால் ஏற்படும் ஆபத்தினை வெளிக்காட்டி இருப்பார்கள். அதேபோல் இந்த படத்திலும் ஒரு பத்திரிக்கையாளராக பெண்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பது போன்ற கதை அமைந்திருக்கும். சமூக வலைத்தளங்களில் ஏற்படும் ஆபத்தையும் இந்த படத்தில் காட்டியுள்ளனர்.

Also Read : 2022-ல் ஐந்து ஹீரோயின்ஸ்-க்கு எகிறிய மார்க்கெட்.. இளவரசியாக சிம்மாசனத்தில் அமர்ந்த குந்தவை திரிஷா

ஆகையால் அப்படியே ப்ரோபைல் படத்தை பட்டி டிங்கரிங் செய்து ராங்கி படத்தை எடுத்துள்ளனர். இப்போது மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிக்க நினைக்கும் த்ரிஷா படத்திற்கு இப்படி ஒரு சோதனையா என பலரும் கூறி வருகிறார்கள். மேலும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கவிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்திலும் திரிஷா தான் ஹீரோயின் என்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி டாப் நடிகர்கள் படங்களில் புக் ஆகி வந்த நிலையில் ராங்கி படம் மிகப்பெரிய சருக்களை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் த்ரிஷாவின் கேரியரில் மீண்டும் பாதிப்பு ஏற்படுமோ என்று அவரது ரசிகர்கள் பயப்படுகின்றனர்.

Also Read : கல்யாணம் பண்ணாமலே வாழ்கையை ஓட்டும் திரிஷா.. முத்தின கத்திரிக்காவின் ரகசியம் உடைந்தது

- Advertisement -