60 வயது நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா.. சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத சோகம்

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை திரிஷா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன.

மௌனம் பேசியதே, சாமி என அடுத்தடுத்து அதிரடி காட்டி தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் நாயகியாக வலம் வந்தார் த்ரிஷா. தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து விட்டார்.

அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக கமர்ஷியல் படங்களில் நடிக்காமல் தொடர் கதையின் நாயகியாக சில படங்களில் நடித்து வந்தார். அவற்றில் சமீபத்தில் பரமபதம் எனும் படம் வெளியானது.

அதனைத் தொடர்ந்து கர்ஜனை, ராங்கி போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. அதைத் தவிர்த்து கைவசம் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படம் மட்டும் தான் உள்ளது.

இந்நிலையில்தான் அக்கட தேசத்தில் இருந்து 60 வயது நடிகரான பாலகிருஷ்ணாவின் படவாய்ப்பு த்ரிஷாவை தேடி வந்துள்ளது. சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாததால் இருக்கிற வாய்ப்பையும் விட வேண்டாம் என ஓகே சொல்லிவிட்டாராம்.

இதில் கொஞ்சம் கிளாமர் காட்டி மீண்டும் தெலுங்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என யோசிக்கிறாராம். தமிழில் முன்னணி நடிகர்களை நோக்கி வீசிய அம்புகளும் குறைந்து விட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளாராம் திரிஷா.

trisha-cinemapettai-01
trisha-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்