செகண்ட் ஹீரோயின் நிலைக்கு தள்ளப்பட்ட த்ரிஷா.. எல்லாத்துக்கும் காரணம் அந்த படம் தான்

பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் திரிஷா. பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் முன்பு போல் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஓரிரு படங்களும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் புதுப்புது ஹீரோயின்களின் வரவால் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து போனது.

இந்நிலையில் திரிஷா அந்த ஒரு திரைப்படத்தில் நடித்ததால் தான் எனக்கு சினிமா வாய்ப்பே பறிபோனது என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி கொண்டிருக்கிறாராம். அதாவது திரிஷா, தனுஷுடன் இணைந்து கொடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவர் தன் காதலனையே கொல்லும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். அப்படம் வெளிவந்த பிறகு அவருடைய நடிப்பு பாராட்டப்பட்டாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் கொடி படத்தில் நடித்தது போன்று வில்லி கதாபாத்திரம் மட்டுமே அவருக்கு கிடைத்ததாம். அதனால் அவர் அந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஒருவேளை அந்த படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருந்தால் இன்று என்னுடைய ரேஞ்சே வேற மாதிரி மாறி இருக்கும்.

ஆனால் கொடி படத்தில் வில்லியாக நடித்ததால் தான் எனக்கு ஹீரோயின் வாய்ப்புகள் வராமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவும் என்னை கேட்கிறார்கள் என்று அவர் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறாராம்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் சுற்றி சுற்றி நடித்துக் கொண்டிருந்த திரிஷா தற்போது இரண்டாவது ஹீரோயின் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் அவர் நடிப்பில் வரவிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான் அவர் பெரிதும் நம்பி இருக்கிறார்.

Next Story

- Advertisement -