கிணத்துல போட்ட கல் போல் ஆன திரிஷா பொழப்பு.. கணவாய் போன கட்டிய கோட்டை

40 வயதிலும் ஹீரோயின் ஆகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் மற்றும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கக் கூடிய ஒரே நடிகை யார் என்றால் அது த்ரிஷாவால் தான் முடியும். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த பிறகு இவருடைய அழகும் தோற்றத்தின் பொலிவும் அதிகரித்து விட்டதே என்ற சொல்லலாம்.

அந்த அளவிற்கு ஹீரோயினாக ஜொலிக்கிறார். இதனால் இவரை தேடி பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தற்போது நான்கு ஐந்து படங்களில் கமிட்டாய் இருக்கிறார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இவருடைய சம்பளத்தையும் அதிகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார்.

Also read: நிச்சயதார்த்தத்தோடு சோலி முடிந்த 5 திருமணம்.. டேட்டிங் உறவால் நின்று போன த்ரிஷா கல்யாணம்

இதை வைத்து சினிமாவில் மறுபடியும் ஆல் ரவுண்டராக வந்துவிடலாம் என்று எண்ணி பல விஷயங்களில் புத்தியை தீட்டி காய் நகர்த்தி வந்தார். ஆனால் தற்போது உள்ள நிலவரத்தை பார்த்தால் இவருக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று தோன்றுகிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்து அஜித்துக்கு ஜோடியாக சேர வேண்டும் என்று விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். ஆனால் அந்தப் படம் இப்பொழுது கிணத்தில் போட்ட கல் மாதிரி எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருக்கிறது. இதுவரை பிள்ளையார் சுழி கூட போட முடியாமல் படாத பாடு பட்டு வருகிறது. இந்நிலையில் இவருக்கு எங்க அஜித்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கப் போகிறது.

Also read: அப்பவே த்ரிஷாவுக்கு போட்டி நயன்தாரா இல்லையாம்.. ஒழித்துக் கட்ட வந்த நடிகையை சிங்கிளாக துவம்சம் செய்த மாமி

எப்படியாவது அஜித் படத்திலும் நடித்து விடலாம் என்று இவர் கட்டிய கோட்டை கனவாகவே போகும் அளவிற்கு விடாமுயற்சியின் படப்பிடிப்பு இருக்கிறது. அத்துடன் எங்கே இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காமலே போய்விடுமோ என்ற பதற்றமும் இவரிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த வாய்ப்பை இவருக்கு கிடைக்காவிட்டால் இவருடைய கனவு கோட்டை பாழாகிவிடும். மேலும் இவரால் இப் படப்பிடிப்பின் நிலவரம் என்னவென்று நேரடியாக தயாரிப்பாளரிடம் கேட்கவும் முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் வரும் போது வரட்டும் என்று மௌனம் காத்து வருகிறார்.

Also read: அஜித்துடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த 5 படங்கள்.. விஜய்க்குப்பின் ஒர்க் அவுட்டான செம கெமிஸ்ட்ரி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்