த்ரிஷாவிற்கு மாப்பிள்ளை ரெடி.. உண்மையை போட்டு உடைத்த தோழி

தமிழ் சினிமாவில் 16 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா(trisha) வாழ்க்கையில் காதலும் சரி திருமணமும் சரி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்து வந்த திரிஷாவுக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது ஹரி இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படம் தான். இதனை தொடர்ந்து வெளியான கில்லி திரைப்படம் த்ரிஷாவை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது.

அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த த்ரிஷா மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். கிளாசிக், கிளாமர் என்ற இரண்டு பக்கங்களிலும் நாணயமாக சுழன்று கொண்டிருந்தார் திரிஷா.

ஒருகட்டத்தில் கமர்சியல் படங்கள் போரடிக்க தற்போது தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சில வருடங்களுக்கு முன்பு வருண் மணியன் என்ற தொழிலதிபரை நிச்சயம் செய்து கொண்டு பின்னர் அந்தத் திருமணத்தை நிறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்ததாகவும், ஆனால் ராணா இவரை விட்டு விட்டு வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட செய்தியும் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் திரிஷாவுக்கு மாப்பிள்ளை ரெடியாகி விட்டதாகவும், அவர் கொண்டாடப் போகும் கடைசி பேச்சுலர்ஸ் பார்ட்டி இதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார் திரிஷாவின் தோழி நடிகை சார்மி.

திரிஷாவுக்கு அக்கட தேசத்தில் ஒரு தொழிலதிபர் மாப்பிள்ளை சிக்கி விட்டதாகவும், விரைவில் இருவருக்குமான திருமண செய்தி வெளிவரும் எனவும் சொல்லாமல் சொல்லியுள்ளார் சார்மி. இதே மாதிரி திரிஷாவை பற்றி ஏகப்பட்ட திருமண வதந்திகள் வருவதால் உண்மையான அறிவிப்பு வரும் வரை நாங்கள் நம்பமாட்டோம் என்கிறார்கள் ரசிகர்கள்.

trisha-cinemapettai-01
trisha-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்