19வது வருடத்தை கொண்டாடிய த்ரிஷாவின் புகைப்படம்.. 38 வயதிலும் செமையா இருக்கீங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. சமீப காலமாக இவரது நடிப்பில் எந்த படங்களும் வெளிவராமல் இருந்தாலும் ரசிகர்களின் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கு காரணம் இவரது நடிப்பில் வெளியான படங்களின் வெற்றி என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் திரிஷா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் இடம்பெற்ற பேசலாமே என்ற வசனம் தான் படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த அளவிற்கு இவரது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து பல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.

விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு திரிஷா இல்லாத படங்களே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் திரிஷா நடிப்பில் உருவான படங்கள் மட்டும்தான் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தன.

திரிஷா திரைத் துறையில் நுழைந்து 19 வருடங்கள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் திரிஷா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மேலும்இப்புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது திரிஷாவிற்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். 19வது வருடத்தை கொண்டாடிய த்ரிஷாவின் வீடியோ

trisha-19th-year
trisha-19th-year

மேலும் திரிஷா நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும் கூடிய விரைவில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வெளியாகும் என அவரது நண்பர்கள் கூறி வருகின்றனர். தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்