வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பொன்னின் செல்வன் படத்திற்குப் பின் மார்க்கெட்டை பிடிக்கும் த்ரிஷா.. லோகேஷ்க்கு இப்படி ஒரு ஆசையா.?

இயக்கிய 4 படங்களிலும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்ததால் தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக  வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைவசம் தளபதி 67, கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கை மாயாவி என நான்கு படங்கள் உள்ளன.

இதில் முதலில் விஜயின் தளபதி 67 படத்தை இயக்க லோகேஷ் முடிவெடுத்திருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் உடன் மாஸ்டர் படத்தில் பணிபுரிந்ததால், 2வது முறையாக தளபதி 67 படத்தில் இணைகிறார். விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் மீது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள், அந்தப் படத்தைவிட பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என எண்ணி ஒவ்வொரு வேலையையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி தளபதி 67 படத்தை கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக எடுக்க திட்டமிட்டு, அதில் விஜய்க்கு வில்லனாக 6 பேரை தரையிறக்கி மாஸ் கட்டப் போகிறார். இதில் விஜய் மும்பை தாதாவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய்க்கு இந்த படத்தில் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். முன்பு சமந்தா தளபதி 67 படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது த்ரிஷா தான் கதாநாயகி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் ஒரு த்ரிஷா பைத்தியம். நடிகைகளிலேயே லோகேஷ்க்கு த்ரிஷாவை தான் ரொம்ப பிடிக்கும். அவரை வைத்து தளபதி 67 படத்தை இயக்குவதை நினைத்து அவர் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் இருக்கிறார். த்ரிஷா-விஜய் இருவரும் ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான கில்லி, அதைத்தொடர்ந்து 2008ல் வெளியான குருவி போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜயுடன் இணையும் த்ரிஷா, தமிழ் சினிமாவின் கடந்த சில வருடங்களாக நல்ல படங்களுக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், தளபதி 67 படத்தின் மூலம் மீண்டும் விட்டதை பிடிக்க போகிறார்.

த்ரிஷா கடைசியாக மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் அழகு தேவதையாக நடித்திருக்கிறார். அந்த படத்திற்கு பிறகு தற்போது தளபதி 67 அதைத்தொடர்ந்து இன்னும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தன்னுடைய மார்க்கெட்டை வேற லெவல் எகிற விடப் போகிறார்.

- Advertisement -

Trending News