திரிஷாவும் கைது செய்யப்பட வேண்டும்.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்

சரித்திரங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கும் போது பல பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை வந்துள்ளது. கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தின் கதை களம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஜெயராம், ஐஸ்வர்யாராய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். A.R.ரகுமான் இசையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடந்து கொண்டிருக்கிறது.

ஹரிகேஷ்வரில் ராணி அகல்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் சிவன் கோவில்களில் படப்பிடிப்பு 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. நர்மதா நதிக்கரையில் பல சிவலிங்கங்கள் உள்ளன. அந்த சிவலிங்கங்கள் புனிதமாக கருதப்படுகிறது. அங்கு நடைபெற்ற படப்பிடிப்பின்போது திரிஷா ஒரு படகில் வருவது போல காட்சிகள் படமாக்கப்பட்டது.

trisha
trisha

படகிலிருந்து இறங்கி கரையில் சிவலிங்கம் நந்திக்கு இடையே நடந்து வரும் காட்சியின்போது த்ரிஷா காலணி அணிந்து வந்தது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இதனைப் பார்த்த இந்து அமைப்பினர் இயக்குனர் மணிரத்தினத்தின் த்ரிஷாவையும் கைது செய்யுமாறு ஹரிகேஷ்வரில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்