படங்களால் வந்த சோதனை.. வித்தியாசமான முறையை கையிலெடுத்த திரிஷா

த்ரிஷா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் திரிஷா தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதுவும் திரிஷாவுக்கு கைகொடுக்கவில்லை.

ஆனால் திரிஷா வைத்து படங்களை இயக்குவதற்கு பல இயக்குனர்களும் வரிசை கட்டி நிற்கின்றன. தற்போது த்ரிஷா கர்ஜனை மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் கூடிய விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா நடித்த படங்கள் எதுவும் சமீபகாலமாக வெளிவராததால் தற்போது திரிஷா வெப் சீரிஸ் நடிப்பதற்கு ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவர் அடுத்தடுத்து 2 வெப் சீரிஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு 2 மடங்கு சம்பளம் வாங்கும் திரிஷா தற்போது வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த உள்ளதால் 3 மடங்கு சம்பளம் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

trisha-cinemapettai
trisha-cinemapettai

அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடம் வெப் சீரிஸ்க்கு தான் அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதனால் மற்ற நடிகைகளை போல திரிஷாவுக்கும் வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஆனால் திரிஷாவிடம் பல இயக்குனர்களும் வெப் சீரிஸ் விட படங்களுக்கு தான் அதிகமான வரவேற்பு இருக்கும் என கூறியுள்ளனர்.

ஒரு சிலர் தொடர்ந்து திரிஷா நடித்த படங்கள் எதுவுமே வெளிவராமல் இருப்பதால்தான் திரிஷா வெப்சீரிஸ் நடிப்பதற்கு காரணம் என கூறி வருகின்றனர். படங்களுக்கு இணையாக திரிஷாவிற்கு சம்பளம் கொடுக்க பல நிறுவனங்களும் தயாராக உள்ளனர் அதனால் இனிமேல் திரிஷா வெப்சீரிஸ் தான் அதிகமான நடிப்பார் எனக் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்