அந்த படம் ப்ளாப் ஆகியிருந்தால் எப்பவோ சினிமாவை விட்டு போயிருப்பேன்.. திரிஷாவை காப்பாற்றிய ஹரி படம்

தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்குமேல் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் இரண்டே பேர்தான். அதில் ஒன்று நயன்தாரா. இன்னொருவர் திரிஷா(trisha). இவர் நயன்தாராவுக்கு முன்பு ஹீரோயினாக தன்னுடைய கேரியரை தொடங்கியவர் திரிஷா.

ஆரம்பத்தில் சுமாரான படங்களை அவருக்கு கிடைத்தது. இதனால் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி விடலாம் எனவும் யோசித்தான். அப்போது தான் கடைசியாக ஹரி பட வாய்ப்பு வந்துள்ளது.

ஹரி ஆரம்பத்திலிருந்தே ஒரு பக்கா கமர்சியல் இயக்குனராக வலம் வந்ததால் அவருடைய படங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டினர். அந்த வகையில் முதன் முதலாக ஹரியின் மற்றும் விக்ரம் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் தான் சாமி.

இந்த படத்தின் வெற்றியைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மற்றைய பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை பந்தாடியது. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை திரிஷா.

இந்த படத்தின் வெற்றி திரிஷாவுக்கு தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் பல்வேறு பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து அவருடைய சினிமா வாழ்க்கையை புத்துணர்ச்சி ஆகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை சாமி படம் மட்டும் பிளாப் ஆகியிருந்தால் அப்படியே சினிமாவை விட்டுவிட்டு சென்றிருப்பேன் எனவும் மனமுருகி தெரிவித்துள்ளார். தற்போது திரிஷா கமர்ஷியல் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

trisha-vikram-cinemapettai-01
trisha-vikram-saamy-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்