சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இயக்குனர்களிடம் சிக்காமல் தப்பித்த ஊர்வசியின் மகள்.. மொத்த அழகையும் காட்டி த்ரிஷாவை ஓரங்கட்ட வரும் புகைப்படம்

Actress Oorvasi: சினிமாவில் உள்ள நடிகைகளை பொருத்தவரை இரண்டு விதமாக இருக்கிறார்கள். அதில் ஒன்று தன்னுடைய வாரிசுகளை எப்படியாவது பெரிய ஸ்டார் ஆக ஆக்கி விட வேண்டும் என்று அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கேட்டு அலைவார்கள். இன்னொன்று இந்த சினிமா வாடை தன்னுடைய போகட்டும், வாரிசுகளை இதில் சேர்க்க வேண்டாம் என்று பொக்கிஷமாக பாதுகாத்து வருவார்கள்.

இந்த வரிசையில் தான் நடிகை ஊர்வசியும் இருக்கிறார். அதாவது 2000ம் ஆண்டு நடிகர் மனோஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். ஆனால் இந்த தம்பதிகளுக்கு குஞ்சட்டா என்ற மகள் உண்டு. ஆனால் மகள் அப்பாவின் அரவணைப்பில் தான் இருக்கிறார்.

அதன் பின் நடிகை ஊர்வசி சென்னை சேர்ந்த தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இவருடைய 46வது வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவ்வப்போது தனது மகளை ஊர்வசி அடிக்கடி சந்தித்து வந்தார். இதனை அடுத்து தற்போது ஊர்வசியை பார்ப்பதற்காக மகள் சென்னைக்கு வந்திருக்கிறார்.

அப்பொழுது ஊர்வசி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் இவருடைய மகளை பார்ப்பதற்கு அம்மாவை விட ஓவர் அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் இவரை பார்ப்பதற்கு ஹீரோயின் மாதிரி தேவதையாக இருக்கிறார்.

இவர் மட்டும் நடிப்பதற்கு வந்து விட்டால் தற்போது இருக்கும் த்ரிஷா மற்றும் முன்னணி ஹீரோயின்களை ஓரம் கட்டி விடுவார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒருவேளை இயக்குனர்கள் கண்ணில் இவர் சிக்கிவிட்டால் கண்டிப்பாக ஹீரோயினாக போட்டு விடுவார்கள். அதனால் தான் என்னமோ ஊர்வசி தன் மகளை இதுவரை யாரிடமும் காட்டாமல் பொத்திவைத்து பொக்கிஷமாக பாதுகாத்து இருக்கிறார் என்பது போல் தெரிகிறது.

ஆனாலும் இவரிடம் ஹீரோயினுக்கான லுக் இருப்பதால் கூடிய விரைவில் சினிமாவிற்குள் நுழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி மட்டும் வந்து விட்டால் ஊர்வசி சினிமாவில் சம்பாதித்த பெயரை விட கண்டிப்பாக இவருடைய பொண்ணு டபுள் மடங்கு சம்பாதித்து விடுவார்.

இயக்குனர்களிடம் சிக்காமல் தப்பித்த ஊர்வசியின் மகள்

oorvasi daughter
oorvasi daughter
oorvasi
oorvasi
- Advertisement -

Trending News